இலவசம் கொடுக்கும் தமிழகம்தான் குஜராத், உ.பி.யை விட வளர்ச்சியில் டாப்.. டேட்டாவோடு ஜெயரஞ்சன் விளாசல்
சென்னை: இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசி இருக்கும் நிலையில், வறுமை ஒழிப்பே வளர்ச்சி என்றும், அதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவருமான ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களுக்கு எதிராக பேசியது, அதற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதிலும் பெரும் விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், தனியார் தொலைக்காட்சியில் இதுகுறித்து நடந்த விவாத நிகழ்ச்சியில் ஜெயரஞ்சன் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.
அதில், "வறுமையை குறைப்பதே நமது முதன்மை இலக்கு. நிதி ஆயோக் வெளியிட்ட கணக்கீடுகளின்படி பெரிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில்தான் மிகக்குறைந்த அளவில் வறுமை இருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 4 விழுக்காடு மட்டுமே.
ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!\

மகாராஷ்டிரா, குஜராத்
அதே இலவசங்கள் எல்லாம் தேவையில்லை என்று சொல்லக்கூடிய மாநிலங்களான மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 15 விழுக்காடு என்றும் குஜராத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 17 விழுக்காடாக உள்ளது. இலவசங்கள் தேவையின்றி செலவு செய்யப்படுகிறது என்று சொல்வது என்ன முகாந்திரம், அளவுகோள் இருக்கிறது? இதனால்தான் உங்கள் பொருளாதாரம் குன்றிவிட்டது என்று சொல்வீர்களா?

இலவசங்கள்
இந்தியாவிலேயே 2 வது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தில் அரசின் கடமைகள் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறும்போது மக்களிடம் எதுவெல்லாம் இல்லையோ அதை வழங்க வேண்டிய தார்மீக பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார். அப்படி இருக்கையில், இதை தவறு என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது. மாநிலத்துக்கும் ஒன்றியத்துக்கும் சம உரிமை இருக்கிறது. இது சரியா தவறா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

எது நல்ல வழி செலவு?
தமிழ்நாட்டில் ஓட்டுக்காக இலவசம் கொடுக்கிறார்கள் என்று எந்த ஆதாரமும் இல்லை. இந்த தேர்தலுக்கு முதல் தேர்தல் வரை மாறிமாறி ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டை இலவசங்களின் நிலம் என்பார்கள். ஆனால், இலவசத்தால் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்று சொல்ல எந்த சான்றும் இல்லை. நல்ல வழியில் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி கட்டிடங்கள், சாலை, பாலங்கள் அமைக்க சொல்கிறார்கள். இவற்றை பிறகு தனியாருக்கு விற்பதுதான் நல்ல வழியில் செய்யும் செலவா?

வறுமை ஒழிப்பு
பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைத்துவிட்டோம் என்று சொல்லி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறார்களே, அது எந்த மாதிரியான வேலைவாய்ப்பு? அதன் தரம் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. நிலையான வளர்ச்சியின் முதல் இலக்கே வறுமை ஒழிப்பு என்பதுதான் உலகம் முழுவதும் உள்ள நிலை. ஜிஎஸ்டி என்பது பெரும் தொழிலதிபர்கள் மட்டும் செலுத்தியது அல்ல. சாமானியர்கள் மற்றும் அன்றாடங் காட்சிகள் வாங்கும் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள்.

ஜிஎஸ்டி
அப்படி பார்த்தால், ஜூலை மாதத்தில் தமிழ்நாடு ரூ.8,500 கோடி ஜிஎஸ்டி செலுத்தியுள்ளது. உபி ரூ.7,000 கோடி கொடுத்துள்ளது. மகாராஷ்டிரா ரூ.22,000 கோடி கொடுத்துள்ளது. இதில் மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் சராசரியாக தமிழ்நாட்டில் ஒருவர் மாதம் ரூ.1,500 ஜிஎஸ்டி செலுத்துகிறார். உபியில் இருப்பவர் ரூ.318 கொடுக்கிறார். மகாராஷ்டிராவில் ஒரு நபர் ரூ.1,022 வழங்குகிறார். அப்படி பார்த்தால், உத்தரப்பிரதேசத்தைவிட தமிழ்நாட்டை சேர்ந்த நபர் மாதம் ஒன்றுக்கு 5 மடங்கு அதிக ஜிஎஸ்டி செலுத்துகிறார்." என்றார்.
-
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications