என்னங்க இது? சமணர்களின் கோயிலை சுற்றுலா தலமாக மாற்றுவதா?.. "தப்பு".. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
சென்னை: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சமணர்களின் புனித கோயிலை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிருதிஹ் மாவட்டத்தில் பரஸ்நாத் மலைத் தொடர் உள்ளது. 1366 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை தான், ஜார்க்கண்ட் மாநிலத்தின் மிகப்பெரிய மலை ஆகும்.
இந்த மலையின் உச்சியில் சமணர்களின் புனித கோயிலான சம்மேத ஷிகார்ஜி கோயில் உள்ளது. அக்கோயில் உள்ளிட்ட மலைப்பகுதியை சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவித்து கடந்த 2019-ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

"சமணர்களின் கோரிக்கை நியாயமானவை"
அதன்படி, சமணர்களின் கோயிலை சுற்றுலா தலமாக மாற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள நிலையில் தான், அதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள சமணர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் சமணர்கள் இன்று பேரணி நடத்தியிருக்கின்றனர். சமணர்களின் உணர்வுகள் நியாயமானவை; அவை மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு.

புனிதம் கெட்டுவிடும் என அச்சம்
பரஸ்நாத் மலையில் உள்ள ஷிகார்ஜி கோயிலில் சமணர்கள், அந்த சமுதாய குருக்களின் வழிகாட்டுதலின்படி ஒழுங்கையும், தூய்மையையும் கடைப்பிடித்துதான் வழிபாடு நடத்துவார்கள். எறும்புகளுக்குக் கூட எந்த தீங்கும் இழைத்து விடக் கூடாது என்பதே சமணர்களின் கொள்கை ஆகும். அதை அவர்கள் எந்த சமரசமும் இல்லாமல் பின்பற்றி வருகின்றனர்.ஜார்க்கண்ட் மாநில அரசின் திட்டப்படி, பரஸ்நாத் மலை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு மது அருந்தி விட்டு, புலால் உணவுகளை உண்ணக்கூடும் என சமணர்கள் அஞ்சுகின்றனர்.

செயல்பாடுகளுக்கு தடை
அது அந்த கோயிலின் புனிதத்தை கெடுத்து விடும் என்றும் சமணர்கள் கவலைப்படுகின்றனர். அவர்களின் அச்சமும், கவலையும் நியாயமானவையே. சமணர் அமைப்புகளின் பிரதிநிதிகளை இதுதொடர்பாக அழைத்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், பரஸ்நாத் மலையில் சுற்றுலா தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் தடை செய்து ஆணையிட்டிருக்கிறார்.

"முடிவுக்கு கொண்டு வர வேண்டும்"
அந்த ஆணையை செயல்படுத்தும்படி ஜார்க்கண்ட் மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இது தான் சிக்கலுக்கான தீர்வாகத் தோன்றுகிறது. எனவே, பரஸ்நாத் மலையை சுற்றுலாத் தலமாக அறிவித்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை ஜார்க்கண்ட் அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் மூலம் சமணர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications