"வானில்" மாற்றம்.. ரெடியாகும் 2 புயல் சுழற்சி.. பின்னியெடுக்க போகுதாம் மழை.. எங்கேன்னு பாருங்க மக்களே
இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: கேரள கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் வரும் 2ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும், நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது... ஆனாலும் வழக்கமான மழை காணப்படவில்லை.. போதிய அளவு மழை பெய்யாத நிலையில், அவ்வப்போது பனியின் தாக்கமும் பெருமளவில் காணப்படுகிறது.
வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால், மழை குறைந்து விடும் என்பது இயல்பு.. ஆனால் இப்போது தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அடிக்கடி பெய்து வருகிறது.

சைக்கிளிங்
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பலமாக கொட்டியது.. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவையில் வரும் 30ம் தேதி வரை இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில், அதன்படி 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தது... இனியும் மழை இருக்கும் என்கிறார்கள்..

ஹேப்பி
இன்று வரை அதாவது 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை முதல் நாகப்பட்டினம் வரை அடுத்த 2 நாட்கள் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.. மேலும், டிசம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, விருதுநகர் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

நகருது சக்கரம்
அத்துடன், டிசம்பர் 2வது வாரத்தில் இந்தோ- சீனா கடல் பகுதியில் சக்கரம் உருவாகலாம். சக்கரங்கள் என்பவை பெரும்பாலும் குறைந்த அட்சரேகையில் நகரும் என்றும் கூறியிருந்தது, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.. இதனிடையே, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் 2 புயல் சுழற்சிகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது... அதாவது, அரபிக் கடலிலும், வங்கக்கடலில் கிழக்கு மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதியிலும் இந்த சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது...

சுத்துது சக்கரம்
நேற்றைய தினம், கனமழை காரணமாக விருதுநகர், தேனி என 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் 2ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.. கேரள கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக டிசம்பர் 2ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நாளை அதாவது 1ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜில் ஜில்
நாளை மறுநாள் 2ம் தேதி தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

3 Hours
இந்நிலையில், மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அடுத்த 3 மணி நேரத்தில், ஜில்லென்று மழை கொட்ட போகிறதாம்.. அதுவும் 6 மாவட்டத்துக்கு அடுத்த 3 மணி நேரத்தில், செம மழை பெய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது... இதையடுத்து அந்தந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications