John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், "எங்களுக்கு அதிமுக பாஜக கூட்டணியில் ராஜபாளையம் பொது தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் என்பது பிறகு அறிவிக்கப்படும்" என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார். இதேபோல் அன்புமணி ராமதாசின் பாமகவிற்கு 18 தொகுதிகளையும், டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

அதிமுக பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியன் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் இன்று இரவு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வருகை தந்தார்.
இதையடுத்து எத்தனை தொகுதிகள் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் பின்னர் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு பொது தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் பொது தொகுதியை ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், "அதிமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டியல் வெளியேற்றத்தின் அறிகுறியாக, முதல் வெற்றியாக பொது தொகுதி வழங்கப்பட்டுள்ளது.. எந்த சின்னத்தில் போட்டி என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications