சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அன்றே எச்சரித்த துரைமுருகன்.. சென்னைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஜோலார்பேட்டையில் மக்கள் போராட்டம்

தண்ணீர் எடுக்கக்கூடாது என வலியுறுத்தி ஜோலார்பேட்டை மக்கள் மறியலில் ஈடுபட்டனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    தண்ணீர் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என்ற துரைமுருகன்.. சங்கடத்தில் திமுக - வீடியோ

    சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணி எடுத்தீங்கன்னா.. வேலூர் மாவட்டம் முழுக்க போராட்டம் வெடிக்கும்" என்று துரைமுருகன் அன்று சொன்னது இன்று நிரூபணமாகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தமிழகத்தில் வாயை திறந்து சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு போன முறை ஆட்சி செய்த திமுகதான் காரணம் என்று அதிமுகவும், 7 வருஷமாக தண்ணீர் பிரச்சனையை தீர்க்காமல் என்ன செய்கிறீர்கள்? என்று அதிமுகவை திமுகவும் மாறி மாறி விமர்சித்து வருகின்றன.

    இதற்காக அதிமுக கோயில்களில் வருண பூஜை செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க, மறுபக்கம் தமிழகம் முழுக்க திமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இரண்டுமே ஒரே நாளில் நடந்து முடிந்து போயிற்று.

    என்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்என்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்

    முதல்வர்

    முதல்வர்

    இந்த சமயத்தில்தான், தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்தார். எடப்பாடியார் இப்படி சொன்ன உடனேயே, துரைமுருகனிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்தால் வேலூர் மாவட்டம் முழுக்க போராட்டம் வெடிக்கும்'' என்று எச்சரித்தார்.

    ஜோலார்பேட்டை

    ஜோலார்பேட்டை

    துரைமுருகனின் இந்த பேச்சு பல்வேறு கருத்துக்களுடன் வலம் வந்ததுடன், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லும் பணிகளுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. ஆனால் எங்களுக்கு 10 நாட்களாக தண்ணீர் இல்லை என்று ஜோலார்பேட்டை மக்கள் குடத்துடன் ஆங்காங்கே மறியலில் உட்கார்ந்து விட்டனர்.

    காலி குடங்கள்

    காலி குடங்கள்

    "கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள் மூலம் சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் வழி திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு தண்ணீர் முறையாக திறந்து விடப்படவில்லை. ஏற்கனவே 10 நாட்களாக தண்ணீர் முறையாக விநியோகிக்கவும் இல்லை" என்று சொல்லி காலி குடங்களுடன் மறியல் நடத்தி வருகிறார்கள்.

    போராட்டம்

    போராட்டம்

    இதை தவிர, ஜோலார்பேட்டையில் உள்ள 3வது வார்டில் கடந்த 15 நாட்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், கேட்டபோது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லையாம். அதனால் இவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    எச்சரித்தார்

    எச்சரித்தார்

    தங்கள் மாவட்டத்திலேயே குடிநீர் பிரச்சனையை முன்கூட்டியே அறிந்துதான் துரைமுருகன் அன்று எச்சரித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் தண்ணீர் எடுக்கும் சோதனை ஓட்டத்துக்கு நடுவே பொதுமக்களின் மறியல் ஜோலார்பேட்டையில் நடந்து வருகிறது.

    English summary
    Public protest against taking drinking water to Chennai through Train in Jolarpettai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X