தலைவர் பதவிக்கே இப்படின்னா.. ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழகம் அவ்ளோதான்.. ஜோதிமணி பாய்ச்சல்
சென்னை: கட்சித் தலைவராக இருக்கும்போதே அண்ணாமலை இப்படி என்றால் ஆட்சி அதிகாரத்தில் வந்தால் அவ்வளவுதான் என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் ஐடி விங் செயலாளராக இருந்தவர் சி.டி.ஆர். நிர்மல் குமார். இவர் நேற்றைய தினம் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துவிட்டார். அத்துடன் தான் ஏன் விலகுகிறேன் என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல நூறு முறை சிந்தித்து இன்று நான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். பல ஆண்டுகளாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையாக நேர்மையாக கட்சியின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த வரை பணியாற்றினேன். இன்று விடை பெறுகிறேன்.

செருப்பாக பயன்படுத்தி
என் மீது நம்பிககை வைத்து என்னுடன் பயணித்த உங்களிடம் எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும் கட்சியையும் செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும் சிந்திக்காு சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவும் இல்லை.

கமலாலயத்தின் செங்கல்
அதையும் தாண்டி தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் கட்சி மற்றும் கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்ததுதான் மிச்சம். குன்றிய மனிதரை போல் செயல்படும் நபரால் கட்சி அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும் பாரக்க முடிகிறது.

20 சதவீதம் கூட இல்லை
2019 ஆம் ஆண்டு இருந்த கட்சி அைமப்பில் தற்போது 20 சதவீதம் கூட இல்லை. அதைப்பற்றி துளியும் கவலை இலமலாமல் மாய உலகத்தில் சுற்றி வரும் ஒரு நபரால் கள எதார்த்தத்தை என்றும் உணர முடியாது. அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர் தோல்வியுற்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்ட போராட்டம் நடத்தி வரும் நிலையில் அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?

தமிழக பாஜகவுக்கு மட்டுமில்லை
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும் அளவிற்கு ஒரு 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல , தமிழகத்திற்கே மிகப் பெரிய கேடு தன்னை நம்பி இருக்கும் தொண்டர்கள் மற்றும் கட்சியை ஏமாற்ற நினைக்கும் ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்? உங்கள் சகோதரன் சி.டி.ஆர் நிர்மல் குமார் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிமணி எம்பி
இதுதொடர்பாக கரூர் எம்.பி.ஜோதிமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பாஜக மாநில ஐடி அணியின் தலைவர், பாஜக மாநில தலைவரின் இன்னொரு முகத்தை #420மலை என்று வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகியிருக்கிறார். கட்சித் தலைவர் பதவியிலேயே இவ்வளவு ஊழல்! இவர்கள் எல்லாம் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்நாட்டை மொத்தமாக விற்றுவிடுவார்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications