பொள்ளாச்சி விவகாரத்தை யார் அரசியலாக்குவது.. தமிழிசை மீது பாயும் ஜோதிமணி
தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜோதிமணி ட்விட்டரில் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி விஷயம் ஒரு பக்கம் மக்களை சூடேற்றி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இதே விஷயத்தை வைத்து தமிழிசையை வாரி வறுத்தெடுத்து வருகிறார் ஜோதிமணி!
ட்விட்டரில் எலியும் பூனையுமாய் சீறி கொள்பவர்கள் காங்கிரசின் ஜோதிமணியும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜனும்தான்! சாதாரண விஷயத்துக்கே பாய்ந்து பாய்ந்து ட்விட்டர் போர் நடத்துபவர்கள் இந்த விஷயத்திலும் விடவில்லை.

தமிழிசை இன்று பதிவிட்ட ட்வீட் ஒன்றில், "எங்கள் பெண் குழந்தைகளின் ஓலத்தை அரசியலாக்காதீர்கள், போராட்டங்களைவிட போராட்டமான அவர்களின் வாழ்க்கையை மீட்டெடுப்போம்" என்பது பெண் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை பதிவிட்டிருந்தார். ஆனால் தமிழிசையின் இந்த ட்வீட்டுக்கு ஜோதிமணி கடுமையான கண்டனத்தை தெரிவித்து பதில் ட்வீட் போட்டுள்ளார்.
பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து பதிவிட்ட அதில் பின்னூட்டம் கண்டிக்கிறோம். ஆனால் அரசியல் செய்யாதீர்கள் என்று வேறு வேறு வார்த்தைகளில் வருகிறது. அவை எல்லாம் வழக்கம்போல எழுதிக்கொடுத்து பரப்பப்படும் குறிப்பிட்ட வர்க்கத்தை சேர்ந்தவை. பெண்களை சூரையாடியவர்களை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் யார்?
— Jothimani (@jothims) March 12, 2019
அதில், "பொள்ளாச்சி கொடூரத்தை கண்டித்து பதிவிட்ட அதில் பின்னூட்டம் கண்டிக்கிறோம். ஆனால் அரசியல் செய்யாதீர்கள் என்று வேறு வேறு வார்த்தைகளில் வருகிறது. அவை எல்லாம் வழக்கம்போல எழுதிக்கொடுத்து பரப்பப்படும் குறிப்பிட்ட வர்க்கத்தை சேர்ந்தவை. பெண்களை சூறையாடியவர்களை மறைமுகமாக ஆதரிப்பவர்கள் யார்?" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழிசை, ஜோதிமணி என்று தனித்தனி அரசியல் புள்ளிகளாக இல்லாமல், பொதுவான கண்ணோட்டத்தில் இதை பார்த்தால், ஜோதிமணியின் இந்த கருத்து சரியானதே! அதே சமயத்தில், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோட ஒரு முக்கியமான பெண் ஆளுமை... சக மனிதரைப்போல இரண்டு ட்வீட்களோடு பொள்ளாச்சி கொடூரத்தை கடந்து போறீங்களே... கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டாமா.?" என்று நெட்டிசன்கள் ஜோதிமணியை கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவும் சரியானதே!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications