தமிழக சட்டசபையை முடக்கலாம்.. இருமுனை கத்தி எந்த பக்கமும் திரும்பும்.. பிரியன் எச்சரிக்கை
சென்னை: திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது. ஆளும் திமுக அரசுக்கு எதிராக 355 சட்டப்பிரிவை பயன்படுத்தி சட்டசபையை முடக்க வாய்ப்பு உள்ளது என்றுதான் செய்தியாளர் பிரியன் கூறியுள்ளார். இது இரண்டு பக்கமும் கூர்மையுள்ள ஒரு கத்தி போன்றதுதான் என்றும் பிரியன் கூறியுள்ளார்.
திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. ஆளும் முதல்வரே ஆட்சிக்கு ஆபத்து என்று சொல்கிறார். அவர் அதை தவிர்த்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக குடியரசுத்தலைவர் எதையும் செய்யமாட்டார் என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவது பாஜகவிற்கு ஒரு பின்னடைவினை கொண்டு வரும். அதனால்தான் அண்ணாமலையும் பதற்றப்படுகிறார்.

மோடி அரசு கொண்டு வந்த சட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவர் நிறுத்தி வைத்து விட்டால் ஆளும் பாஜக அரசு பார்த்துக்கொண்டிருக்காது.
உங்களுக்கு வந்தா ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போலத்தான் உள்ளது. அரசியல் அமைப்புக்கு விரோதமாக செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குகிறேன். அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்தார் என்றால் அரசு இயந்திரம் செயல்படாமல் செயலிழந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
அரசியல் சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியானது முன்பு கலைக்கப்பட்டது. பொம்மை தீர்ப்புக்கு பிறகு அது பயன்படுத்தப்படவில்லை. செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ததை நிறுத்தி வைத்த ஆளுநர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு நடவடிக்கைக்கு உத்தரவு தர மறுக்கிறார். ஆதாரத்துடன் அரசு ஊடகங்களில் வெளியிட்டும் ஆளுநர் அது பற்றி எந்த ரியாக்சனும் தரவில்லை.
டெல்லிக்கு சென்ற ஆளுநர் ஆர்.என். ரவி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். ஆளுநர் ரவி ஒன்றும் தானாக பேசியிருக்க மாட்டார். மத்தியில் ஆளும் பாஜக அரசு சொன்னதைத்தான் ஆளுநர் செய்கிறார் என்றாலும் அவர் அதிகப்படியாக செய்கிறார் என்று அண்ணாமலை நினைக்கிறார்.
செந்தில் பாலாஜி விசயத்தில் அட்டர்னி ஜெனரலை ஆலோசித்து விட்டு மீண்டும் ஒரு அறிவிப்பினை ஆளுநர் ரவி வெளியிடுவாரா ?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர் டெல்லி சென்றிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு செக் வைக்கும் விதமாக குடியரசுத்தலைவருக்கு 19 பக்க கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ஆளுநரை மாற்றுவது என்பது பிரதமர் மனது வைத்தால் மட்டுமே முடியும் அது எல்லோருக்கும் தெரியும். ஏன் இந்த கடிதம் என்றால் ஆளுநரைப் பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை எந்த அளவிற்கு ஆளுநர் சங்கடப்படுத்துகிறார் என்பதற்காகவே இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கலாம். ஜனாதிபதி யாரை சந்திக்க வேண்டும் என்பதையே பிரதமர் அலுவலகம்தான் தீர்மானிக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கே அழைக்கவில்லை. அப்படி இருக்கும் போது ஆளுநரைப்பற்றி முதல்வர் எழுதிய கடிதம் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பது நமக்கு தெரிந்த விசயம்.
உங்களுடைய நடவடிக்கைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களைப்பற்றி நாங்கள் மக்களிடம் கொண்டு சென்று விட்டோம் என்பதுபோலத்தான் முதல்வரின் செயல்பாடு உள்ளது. எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் பாஜக செல்ல வாய்ப்பு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். எந்த எல்லையும் என்று சொல்வது ஆட்சியை முடக்குவது, ஆட்சியை கலைப்பது என்று நினைத்துதான் பேசியுள்ளார்.
ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதுதான் இல்லை. சட்டசபையை முடக்கி வைத்து சில எம்எல்ஏக்களை இழுத்து மீண்டும் புதிய அரசை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட வாய்ப்புள்ளது. இன்னும் சில அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அமலாக்கத்துறையை நடவடிக்கை எடுக்க வைக்கலாம். இதையெல்லாம் வைத்துதான் எதிர்கட்சியினர் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி கவிழும் 2024ல் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தல் தர வாய்ப்பு உள்ளது என்றும் பேசி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினும் ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கவலையில்லை என்று பேசியுள்ளார். பாஜகவை தோற்கடிப்பதுதான் எங்கள் நோக்கம் என்றும் பேசியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அதை சொல்லியிருக்க வேண்டியது இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. முதல்வருக்கே பயம் இருக்கிறதோ என்ற எண்ணத்தை திமுகவினரிடையே தோற்றுவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறை கூட ஆட்சி கவிழும் என்பதைப்பற்றி பேசியதில்லை. அவர் பாஜகவை நம்பி நடத்திய ஆட்சிதான். பாஜகவினர் ஆதரவு இருந்த காரணத்தினால்தான் ஆட்சி முழுமை அடைந்தது. நாங்கள் கொல்லைப்புறமாக வரமாட்டோம் என்று திமுக கூறியது. இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக சித்தாந்த ரீதியாகவும் கொள்ளை ரீதியாகவும் பாஜகவிற்கு எதிரான மனநிலையில் உள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சியினரை ஒன்றிணைக்கிறது.
ஆளும் திமுக அரசுக்கு எதிராக பாஜக மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. மத்திய அரசு மூலமாகவும், ஆளுநரை வைத்தும் தாக்குகின்றனர். அண்ணாமலையை வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மும்முனை தாக்குதலை திமுக சமாளித்து வரும் இந்த சூழ்நிலையில் ஆளும் அரசுக்கு எதிராக 355 சட்டப்பிரிவை பயன்படுத்தி சட்டசபையை முடக்க வாய்ப்பு உள்ளது என்றுதான் நான் சொல்கிறேன். இது இரண்டு பக்கமும் கூர்மையுள்ள ஒரு கத்தி போன்றதுதான். திமுகவின் செல்வாக்கை குறைக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி செய்தால் அது பாஜகவிற்கே எதிராக திரும்பும் என்றுதான் நான் சொல்வேன்.
ஆளுநர் பேசும் விசயங்களே திமுகவின் செல்வாக்கை அதிகரிப்பது போல உள்ளது பாஜகவின் மதிப்பை மக்கள் மத்தியில் குறைக்கும் வகையில் உள்ளது என்று அண்ணாமலையே சொல்கிறாரே. எனவே இந்த விசயத்தில் கவனமாகத்தான் பாஜக செயல்படும். ஆளுநர் மூலமாக பாஜக செய்யக்கூடிய செயல்களை
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications