“அப்பா மாதிரியே போஸ்”.. குழந்தையுடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. வச்சு செய்யும் ஜாய் கிரிசில்டா!
சென்னை: ஜாய் கிரிசில்டாவுக்கு கடந்த 31 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஜாய், எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தற்போது ஒரு இன்ஸ்டா ஸ்டோரியை வெளியிட்டுள்ளார். அதில், "அப்பாவை போலவே போஸ்.. ஒரே ஜீன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கேட்டரிங் சர்வீஸ் விஐபிகள் மத்தியில் பிரபலம். இவரது மனைவி ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ் 'குக் வித் கோமாளி' என்ற சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்றார்.

இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீசில் கார் அளித்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தங்களுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தான் கருவுற்ற நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார். மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் மூலம் பல முறை கருவுற்று அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே, ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தான் நிறைமாத கர்பிணியாக இருப்பதால் ஆடை வடிவமைப்பில் ஈடுபட முடியவில்லை என்பதாலும், தற்போது தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்றும், கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு மருத்துவ செலவு, வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் 6,50,000 ரூபாய் பராமரிப்பு செலவு தொகையை ரங்கராஜ் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகளிர் ஆணையம் , காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜூனியர் மாதம்பட்டி ரங்கராஜ். அப்பாவின் முகத்தையே உரித்து வைத்துள்ளார்" என்று கூறி குழந்தையின் கை விரல் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
ஜாய் கிரிசில்டா, தனக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து முகத்தை மறைத்த குழந்தையின் புகைப்படத்துடன் மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படத்தையும் வைத்து பதிவு வெளியிட்டு வருகிறார். குழந்தையின் பிறப்பு பதிவு படிவத்தையும் வெளியிட்டார் ஜாய் கிரிசில்டா. அதில் தந்தை பெயர் என்ற இடத்தில் ரங்கராஜ் தங்கவேல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தையின் தொழில் எனும் இடத்தில் சமையல் கலைஞர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று மீண்டும் குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் ஜாய் கிரிசில்டா. அதில், மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதில், "அப்பாவை போலவே போஸ்.. ஒரே ஜீன்.. #மாதம்பட்டி ரங்கராஜ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications