செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை பார்த்த நீதிபதி அல்லி.. என்ன சொன்னார்? அமைச்சரின் அடுத்த மூவ் என்ன?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி என்ன சொன்னார் தெரியுமா?
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை காவலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றக் காவல் முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இதுவரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றக் காவல் முடிந்த போதெல்லாம் செந்தில் பாலாஜி வீடியோ கான்பரன்ஸில் ஆஜர்படுத்தப்படுவார். ஆனால் நேற்றைய தினம் அவருடைய நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் அவர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்யும் நோக்கில் நம்பிக்கையுடன் ஷேவிங் எல்லாம் செய்துகொண்டு வந்திருந்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிபதி ரவி, அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், அதற்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்த 150 பக்க குற்றபத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் வழங்கப்பட்டது. அடுத்தமுறை காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜர்படுத்த தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தினால் போதுமென சிறைத் துறைக்கு நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். இதை கேட்ட நீதிபதி அல்லி, மனுவை பார்க்கிறேன் என்று அர்த்தம்படும்படியாக Let Me see என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. செந்தில் பாலாஜி எதை கேட்டாலும் தம்பிக்குத்தான் தெரியும் என கூறியிருந்ததால் அசோக்குமார் கைது செய்யப்பட்டால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications