நாமக்கல் சென்ற கேரளா பெண்ணை கண்ட இடங்களில் தொட்ட ஜூடோ பயிற்சியாளர்!.. விசாரணையில் அம்பலம்
சென்னை: தற்காப்பு கலைப் பயிற்சி பயில வந்த கேரளா பெண்ணிடம் ஜூடோ பயிற்சியாளர் அத்துமீறி நடந்ததாகவும் அந்த பெண் ஒத்துழைக்காததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் 11-ஆவது பிரதான சாலையில் தனியார் தற்காப்புப் பயிற்சி அளித்து வந்தவர் பயிற்சியாளர் கெபிராஜ். இவர் சென்னையில் உள்ள பள்ளிகளில் பகுதி நேரமாக தற்காப்பு கலையை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறார்.

தனியார் பள்ளி
2014ஆம் ஆண்டு கேரளாவில் இருந்து ஜூடோ போட்டிக்காக சென்னை தனியார் பள்ளிக்கு வந்த பெண்ணுடன் கெபிராஜுக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அந்த பெண் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டு தனியார் கல்லூரியில் சென்னையில் சேர்ந்தார்.

தற்காப்பு கலை பயிற்சி
அப்போது தற்காப்பு கலை பயிற்சியை எடுக்க விரும்பிய அவர் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை தொடர்பு கொண்டு அவரிடம் பயிற்சி பெற்றார். இந்த நேரத்தில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியில் கலந்து கொள்ள கெபிராஜுடன் அந்த பெண் சென்றார். அப்போது அந்த பெண்ணின் அந்தரங்களை தொட்டு பாலியல் சீண்டல்களில் கெபிராஜ் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

கொலை மிரட்டல்
இதை எதிர்த்த அந்த பெண்ணை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளாராம். அதோடு மீண்டும் மீண்டும் கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார்கள் கூறுகின்றன. இதுகுறித்து கெபிராஜிடம் விசாரித்த போது அவர் அந்த தவறுகளை செய்யவில்லை என தெரிவித்தார்.

பாலியல் தொந்தரவு
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியில் பதுங்கியிருந்த அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் மறுத்த கெபிராஜ், போலீஸாரின் "விசாரணையில்" உண்மையை ஒப்புக் கொண்டாராம். அவர் வேறு யாரிடம் எல்லாம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?











Click it and Unblock the Notifications