“விஜய் ஒரே ஒரு கையெழுத்து போட்டா போதும்.. எல்லாரும் போட்டி போட்டு வருவாங்க”.. புஸ்ஸி ஆனந்த் பேச்சு
சென்னை: "எங்க தலைவர் ஒரே ஒரு கையெழுத்து மட்டும் போட்டா போதும், எல்லாரும் போட்டி போட்டு படத்தை வாங்குவாங்க" என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடலூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். மேலும், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவும் கலந்துகொண்டார்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார். எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டுவிட்டு வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அவர் அரசியலுக்கு வரவில்லை.
விஜய் அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் பட உரிமை விற்றுவிடும். நான், நீ என போட்டி போட்டு போட்டுக்கொண்டு படத்தை வாங்குவார்கள். அந்த உச்சத்தை விட்டுவிட்டு, மக்களுக்காக சேவை செய்ய வந்த தலைவர் தான் விஜய்.
உண்மையான தொண்டர்கள் இருக்கும் ஒரே கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான். நம்மிடம் காசு பணம் இல்லை, ஆனால் உண்மையான உழைப்பு இருக்கிறது. நான் ஊழல் செய்யமாட்டேன், என்னுடன் இருப்பவர்கள் யாரும் ஊழல் செய்யமாட்டார்கள் எனச் சொன்ன ஒரே தலைவர் விஜய் தான்.
திமுக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக திமுக அரசு இருக்கிறது. நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் தவெக கோட்டையாக இருக்கும்.
தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் திமுக 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்." எனப் பேசியுள்ளார்.
-
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications