ஊடகத்தினர் மீதும் பாஜகவுக்கு பெரும் மரியாதை உண்டு.. எச் ராஜா கருத்துக்கு அண்ணாமலை விளக்கம்
சென்னை: ஊடகத்தினர் மீது பாஜகவுக்கு பெரும் மரியாதை உண்டு என பாஜக மூத்த தலைவர் எச் ராஜா விமர்சனம் செய்துள்ளது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ருத்ரதாண்டவம் படத்தின் சிறப்பு காட்சியைப் பார்த்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, ஊடகவியலாளர்களை மிகவும் அவதூறு வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைமை, எச் ராஜாவை கண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

ட்விட்டர் பக்கம்
இந்த நிலையில் எச் ராஜாவின் விமர்சனம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு.

அல்லவற்றை
நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து
சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.

ஊடகம்
தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறது என அண்ணாமலை தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தில் அண்ணாமலை, எச் ராஜாவை கண்டிக்கவில்லை என அதிருப்தி நிலவுகிறது.

நிர்வாகத் துறை
நாட்டின் 4 தூண்களாக சட்டம், நீதித் துறை, நிர்வாகத் துறை, பத்திரிகைத் துறை ஆகியவை விவரிக்கப்படுகிறது. நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்களையும ஜனநாயக ரீதியில் கேள்வி எழுப்பும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பல அவதூறுகளுக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாக பத்திரிகையாளர்களின் மனக்குமுறலாக இருக்கிறது. எனினும் தங்கள் உரிமைகளையும் கடமைகளையும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்பதும் பத்திரிகையாளர்களின் கருத்தாக உள்ளது.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்?












Click it and Unblock the Notifications