இந்துத்துவா சித்தாந்தத்தை அதிமுகவில் திணிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி?.. கேட்கிறார் கே.சி.பழனிசாமி!
சென்னை: அதிமுக இந்துத்துவா சித்தாந்தத்தை எடப்பாடி பழனிசாமி திணிக்கிறாரா என முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கையால் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்டவர் கே.சி.பழனிசாமி. இவரை எம்ஜிஆரின் தத்து பிள்ளை என சொல்லும் அளவுக்கு புரட்சி தலைவருடன் நெருக்கம் காட்டி வந்தார்.

அவர் மறைந்ததும் ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாக இருந்தார். அவரது குட்வில் புக்கிலும் இடம் பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மறைந்தவுடன் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இயங்கி வந்தார் கே.சி.பழனிசாமி.
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது அதில் இருந்தவர்களில் இவரும் ஒருவர். சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என முதலில் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்தவரும் கே.சி.பழனிசாமிதான். இவர் முன்னாள் எம்பியும் ஆவார். இவருக்கு டெல்லியில் சில தொடர்புகளின் உதவியுடன் தேர்தல் ஆணைய நிலவரங்களை கை விரல் நுனியில் வைத்துள்ளார்.
ஓபிஎஸ் செல்வாக்கு பெற்றிருந்த காலகட்டத்தில் கூட சட்டத்திட்டத்தின்படி அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார் கேசிபி. இவர் அந்த மனுவை கடைசி வரை வாபஸ் பெறவே இல்லை. எடப்பாடியும் ஓபிஎஸ்ஸும் இணைந்த பிறகு கூட அந்த மனுவை வாபஸ் பெறாமல் புதுப்பித்தார்.
பொதுச் செயலாளர் பதவியே இல்லை. கூட்டுத் தலைமைதான் என முடிவு செய்த பிறகும் கூட கே.சி. பழனிசாமி தனது மனுவை திரும்ப பெறவே இல்லை. இவர் ஒரு முறை காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தமிழகத்தின் உயிர்நாடிப் பிரச்சினை. அதை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து ஓட்டளிப்போம் என கூறினார்.
இதையடுத்து கே.சி. பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டார். அது முதல் அதிமுகவை எப்படியாவது மீட்க வேண்டும் என கே. சி. பழனிசாமியும் போராடி வருகிறார். ட்விட்டரில் அவ்வப்போது வாக்கெடுப்பு நடத்தி அதிமுக குறித்து தொண்டர்களின் மனநிலையை அறிந்து வருகிறார். இந்த நிலையில் அவர் அதிமுக மாநாட்டு வீடியோவை வெளியிட்டு சில தகவல்களை கூறியுள்ளார்.
"நான் கடவுள்" என்று ஆரியா நடித்த படத்தில் இடம்பெற்ற அகோரி பாடலை பாடி அதிமுகவின் கடவுள் நான்தான் என்று பறைசாற்றுகிறாரா @EPSTamilNadu ? #அதிமுக வரலாற்றில் #எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டுவந்த கலாச்சாரம் தாண்டி இந்துத்துவா சித்தாந்தத்தை @AIADMKOfficial -வில் திணிக்கிறாரா… pic.twitter.com/XTXRLWtcMg
— K C Palanisamy (@KCPalanisamy1) August 20, 2023
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நான் கடவுள்" என்று ஆரியா நடித்த படத்தில் இடம்பெற்ற அகோரி பாடலை பாடி அதிமுகவின் கடவுள் நான்தான் என்று பறைசாற்றுகிறாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுக வரலாற்றில் எம்ஜிஆர் பாடல்கள் மட்டுமே பாடப்பட்டு வந்த கலாச்சாரம் தாண்டி இந்துத்துவா சித்தாந்தத்தை அதிமுகவில் திணிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி? இவ்வாறு தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications