ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதியா.. கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவியுங்கள்.. கே.எஸ்.அழகிரி
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 7 பேரையும் விடுதலை செய்தது போல் கோவை சிறையில் உள்ள இஸ்லாமியர்களையும் விடுவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 32 ஆண்டுகளாக தண்டனை காலம் முடிந்தும் விடுவிக்கப்படாமல் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் எழுவரையும் விடுவிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தமிழக சட்டசபையில் எழுவர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அவர்களை விடுதலை செய்வதற்கான அந்த தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்படவே இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கிலும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களை விடுவிக்கலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

மசோதாக்கள்
ஆனாலும் ஆளுநர் அந்த மசோதாக்கள் மீது எந்த விதமான முடிவையும் எடுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தை பேரறிவாளன் அணுகினார். அப்போது உச்சநீதிமன்றத்திற்கான 142 சட்டவிதி படி அவர் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அது போல் மசோதா மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரையும் நீதிமன்றம் கண்டித்தது.

விடுவிக்க வேண்டும்
இதன் அடிப்படையில் தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரையும் விடுதலை செய்ததை பாஜகவும் தமிழக காங்கிரஸும் கடுமையாக எதிர்த்தது.

பேரறிவாளன்
கடந்த முறை பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதற்கே தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் 7 பேரையும் உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் என கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில் குற்றவாளிகள் கொலைக்காரர்கள் என்பதையும் அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மீதமுள்ள 6 பேர் விடுதலை குறித்தும் கே எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

நேரு பிறந்தநாள்
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு கேஎஸ் அழகிரி மாலை அணிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை சிறையில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இஸ்லாமியர்கள்
அவர்களில் பலர் வழக்கு விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படாமலேயே சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்காதது ஏன், ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி, இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு நியதியா. கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என்றார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications