கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்' விருது.. ரூ.10 லட்சம் காசோலையை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது கி.வீரமணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு "தகைசால் தமிழர் விருது' வழங்க தேர்வுக் குழுவினர் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை கி.வீரமணிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வழங்க உள்ளார்.
இளம் வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டு, சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர் கி.வீரமணி. 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராகப் பொறுப்பேற்று தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து விடுதலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் கி.வீரமணி.

உண்மை, பெரியார் பிஞ்சு, The Modern Rationalist இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணையதளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துகளைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பெரும்பங்கு ஆற்றியவரும் திராவிடர் கழகத் தலைவருமான முனைவர் கி.வீரமணிக்கு 2023ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருது முதுபெரும் பொதுவுடமை இயக்கத் தலைவர் சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவுக்கு வழங்கப்பட்டது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications