சென்னையில் அப்படி மட்டும் போயிடாதீங்க.. தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் போட்ட அதிரடி உத்தரவு
சென்னை: இன்று காணும் பொங்கல் பண்டிகை சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி குடிபோதையில் அட்டகாசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கடந்த ஜனவரி 14ம்தேதி தொடங்கி ஜனவரி 17ம் தேதி நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஜனவரி 15ம் தேதியான நேற்று முன்தினம் தை 1ம் தேதி என்பதால் தை பொங்கல் கொண்டாடப்பட்டது. நெற்பயிர்கள் விளைய காரணமாக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கரும்புகளுடன் , பொங்கல் வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.

தை இரண்டாம் நாளான நேற்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. விவசாயிகளின் நண்பனாகவும், உழவுக்கு உயிருட்டும் தோழனாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப்பொங்கல் திருவிழா நேற்று நடந்தது.
இந்நிலையில் இன்று காணும் பொங்கல் பண்டிகை சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதியில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி குடிபோதையில் அட்டகாசம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் சேலையூர் பதுவஞ்சேரி பகுதியில் காவல்துறை குடும்பத்தினர் கலந்துகொண்ட பொங்கல் விழா நடந்தது. இதில் தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், "இன்று காணும் பொங்கல் திருநாளையொட்டி, சுற்றுலா தளங்கள், கடற்கரைகள், வணிக வளாகங்கள், கிழக்கு கடற்கரை சாலை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
காணும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் அட்டகாச செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம். பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை வருபவர்கள் பாதுகாப்பாகவும் விபத்து இல்லாமல் வரும் வகையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.. கடற்கரைகளில் கடலில் இறங்கி தயவு செய்து குளிக்க வேண்டாம். எனினும் முன்னெச்சரிக்கையாக கடற்கரை பகுதியில் பாதுகாப்புக்காக மீனவர்கள், உயிர் காக்கும் வீரர்கள், போலீசார் அமர்த்தி உள்ளோம் . பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்தி காணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் " இவ்வாறு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications