ஸ்ரீவித்யாவை வட்டமிட்ட உருவம்.. 'காதலுக்கு மரியாதை'யில் விழுந்த நிஜ காதல்.. இவரா அந்த பிரபலம்? வாவ்
சென்னை: காதலுக்கு மரியாதை படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்துள்ளீர்களா, அது ஸ்ரீவித்யாவின் நிஜ வாழ்க்கையுடன் ஒத்து போயுள்ளது தெரியுமா?
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவில் கூறியிருப்பதாவது: 'காதலுக்கு மரியாதை' க்ளைமாக்ஸ் நேத்து பார்த்திட்டிருந்தேன்... நெகிழ வைத்த க்ளைமேக்ஸ்...உண்மையில் இரு குடும்பமும் 'காதலுக்கு மரியாதை' தான் செய்திருப்பார்கள்... அந்த காட்சியில வேறொரு ஸ்பெஷல் இருக்கு. அது என்னன்னா கேபிஏசி.லலிதாவும் (ஷாலினியின் அம்மாவாக நடித்தார்) , ஸ்ரீவித்யாவும்....

ஸ்ரீவித்யா 'அபூர்வ ராகங்களு'க்கு பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் மலையாளத் திரையுலகம் அவரை ஸ்வீகரித்துக் கொண்டது. நிறைய மலையாளப் படங்களில் நாயகியாக நடித்தார். அப்போது தான் இயக்குனர் பரதனை சந்தித்தார். பரதன் ஒரு ஓவியர். தன் படத்தின் காட்சிகளை ஓவியமாக வரைவது அவர் வழக்கம். பரதனும் ஸ்ரீவித்யாவை விரும்பத் தொடங்கினார்.
ஆனால் இரு வீட்டாரும் எதிர்ப்பு தான்.. பரதன் நேரே லலிதாவின் சென்னை வீட்டுக்கு போவார். லலிதாவிடம் ஸ்ரீவித்யாவுக்கு போன் செய்ய சொல்லி பின் ரிசீவரை வாங்கி இருவரும் பேசிக் கொள்வார்கள். நாளொரு மேனியாக வளர்ந்தது காதல். பரதனுக்கு ஸ்ரீவித்யா மேல் எப்போதும் சந்தேகம். இதனால் இருவருக்கும் க்ளாஷ்... பரதன் அப்போது வேறு பெண்ணின் காதலிலும் விழுந்தார். அப்பெண் வேறு யாருமில்லை... சீரியலில் மாமியாராக இன்று கலக்கும் சாந்தி வில்லியம்ஸ் தான்..
பரதன் நேரே லலிதாவும், ஸ்ரீவித்யாவும் இருக்கும் செட்டுக்கு போய் 'இனி நாம் பிரிவோம்' எனச் சொல்லி வித்யா அழ அழ பிரிந்துவிட்டார். இதற்குப் பிறகு ஸ்ரீவித்யா உதவி இயக்குனர் ஜோர்ஜை காதலித்து மணந்தது தனிக்கதை. காலங்கள் உருண்டோட பரதன் பல இடங்களில் சுற்றி லலிதாவிடம் வந்தார். 'இனி நான் நல்லவனாக இருப்பேன். நாம் திருமணம் செய்து கொள்ளலாம்' எனக் கேட்க லலிதாவும் அவரை ஏற்றுக்கொண்டார்.
பரதன் வீட்டில் இதற்கும் எதிர்ப்பு. நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்து அவர்கள் சென்னையில் குடியேறினார்கள். இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஸ்ரீவித்யா டைவர்ஸாகி திரும்பவும் நடிக்க வந்ததும் வாழ்க்கை ஒரு வட்டமென பரதனிடமே வந்தார். திரும்பவும் அவர்கள் காதல் தொடங்கியது. லலிதாவின் அழுகை அவர்களை சட்டை செய்யவில்லை. தனியாக வசிக்க தொடங்கினர்.
பரதன் இரு வீடுகளுக்கும் வந்து போய்க் கொண்டிருந்தார். மகனை வித்யாவோடு வளர்ப்பதாக கேட்பார். ஒரு நாளில் குடிக்கு அடிமையான பரதன் 51 நாள் கோமாவில் இருந்து இறந்தே போனார். லலிதாவும், வித்யாவும் காதலுக்கு மரியாதை செய்யும் அந்தக் காட்சியில் உண்மையில் 'காதலுக்கு மரியாதை' செய்தது யார்?
வித்யாவின் கடைசி காலமும் மோசமாகவே கழிந்தது...
காதலும் வாழ்க்கையும் வித்யாவுக்கு கானல் நீராகவே அமைந்தது... அந்தக்காட்சியில் லலிதா-வித்யா டயலாக்.....
வித்யா: "நடந்ததெல்லாம் மறந்துடுங்க..."
லலிதா: "சேச்சே...இப்போ எதுக்கு அதெல்லாம்..மனசுக்கு சங்கடம் தானே. எல்லோரும் எல்லாத்தையும் மறக்கணும்கிறது தான் என்னோட பிரார்த்தனையே..." What a perfect life fit.. இவ்வாறு அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications