சித்திரை முழு நிலவு மாநாடு! ராமதாஸ், அன்புமணி மீது காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விமர்சனம்!
சென்னை: சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தும் விவகாரத்தில் ராமதாசும், அன்புமணி ராமதாசும் நாடகம் போட்டுள்ளதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விமர்சித்துள்ளார்.
அடுத்த வருடம் யார் நடத்தினாலும் சரி, நடத்தாவிட்டாலும் சரி, சித்திரை முழுநிலவு மாநாட்டை தாமே முன்னின்று நடத்துவேன் என உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை விடுத்துள்ள அறிக்கை வருமாறு;
சித்திரை முழுநிலவு மாநாடு: ''ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாள் அன்று சித்திரை முழுநிலவு மாநாடு என தந்தையால் நடத்தப்பட்டது. வன்னியர்கள் பல்வேறு கட்சிக் சித்தாதங்களை பின்பற்றினாலும் சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு எனது தந்தை அழைத்தால் அனைவரும் குடும்ப உறுப்பினர்களோடு மாநாடு நடக்கும் இடத்திற்கு ஒன்று கூடுவார்கள்.''
''ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்களுக்கு முன்பே எனது தந்தை மாநாடு நடத்துவதற்காக ஏற்பாடுகளை துவங்கி விடுவார்.என் தந்தை வன்னியர்களின் வீர வரலாற்றை வீர எழுச்சி உரையோடு மாநாடு மேடையில் பேசுவார். ''

1 கோடி வன்னியர்கள்: ''1 கோடி வன்னியர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினாலும், என் தந்தையின் ஒற்றை வார்த்தைக்கு அந்த மாநாட்டு கூட்டம் அமைதியாக இருக்கும். இந்த செயல் என் தந்தை மீது எம் மக்கள் வைத்திருக்கும் அன்பு சிலர் அண்ணாக, சிலர் வழிகாட்டியாக, சிலர் தலைவராக, அவர்களுக்கு பிடித்த முறையில் என் தந்தையின் மீது அன்பு வைத்து இருந்தனர்.''
''டாக்டர ராமதாஸ் மீது எங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் சித்திரை முழுநிலவு மாநாடு 2023-ல் நடைபெறும் என அறிவித்திருந்தது உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், தற்போது டாக்டர் இராமதாஸ் மற்றும் அன்புமணி இராமதாஸ் இருவரும் சேர்ந்து இந்த வருடம் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தவில்லை என்று தற்போது கூறுவது வன்னிய மக்களுக்கும், மாவீரன் குரு மீது அன்பு கொண்ட மக்களுக்கும் இழைக்கும் துரோகம். ''
உணர்வுகளோடு விளையாடி: ''நம் உணர்வுகளோடு விளையாடி இவர்கள் அரசியல் செய்கிறார்கள். ஒரு போதும் நம்மால் இவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் இவ்வாறு மக்களிடம் பொய்ச் சொல்லக் காரணம் மரக்காணம் நிகழ்வு வழக்கு முடிந்தப் பிறகு எங்களைப் போன்ற யாரும் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்தி மாவீரன் காடுவெட்டி குருவுக்கு புகழ் அஞ்சலி செலுத்திவிடகூடாது என்பதற்காக தந்தையும், மகனும் இந்த நாடகத்தை போட்டு அனைத்து வன்னியச் சொந்தகளையும் ஏமாற்றி உள்ளனர்.''
''நானும் என் மக்களைப்போல் ஏமாந்துவிட்டேன். நம் வன்னியர்குல சொந்தங்களே என்னையும் மன்னித்து விடுங்கள். நம் உணர்வுகளோடு தந்தையும், மகனும் அரசியல் செய்யமாட்டார்கள் என நினைத்தேன். இவர்களின் சுயநல அரசியல் இப்போதுதான் புரிகிறது. இந்த ஆண்டு 2, 3 நாட்களே உள்ளதால் போதிய காலம் இல்லாததால் என்னாலும் சித்திரை முழுநிலவு மாநாடு நடத்த முடியவில்லை.''
அடுத்த ஆண்டு உறுதி: ''ஆனால் அடுத்த வருடம் யார் நடத்தினாலும் சரி, நடத்தாவிட்டாலும் சரி, சித்திரை முழுநிலவு மாநாடு மாவீரன் நடத்திய அதே மகாபலிபுரத்தில் உங்களின் குலதெய்வம் மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு மகளாக நான் எந்த தடைகள் வந்தாலும் சித்திரை முழு நிலவு மாநாட்டை நடத்தி மாவீரன் வழியில் வன்னியர்களின் வீர வரலாற்றையும், பண்பாட்டையும், ஒழுக்க நெறிகளையும் உலகம் அறியச் செய்வேன்.''
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications