Kajal Agarwal: கார் விபத்தில் சிக்கினாரா நடிகை காஜல் அகர்வால்? உயிரிழந்ததாகவும் பரவிய வதந்தி!
சென்னை: நடிகை காஜல் அகர்வால், கார் விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் என்றும் அவர் காலமாகிவிட்டார் என்றும் சமூகவலைதள பக்கத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை காஜல் அகர்வால் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வட நாட்டு அல்லது தென்னிந்தியாவை சேர்ந்த ஹீரோயின்கள் பலர் பிரபலமாகி முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்துள்ளனர். சிம்ரன், ஜோதிகா, நதியா, காஜல் அகர்வால், நயன்தாரா, ராஷ்மிகா உள்ளிட்டோர் ஆவர்.

இவர்களில் காஜல் அகர்வால், விஜய், கார்த்தி, சூர்யா உள்ளிட்டோருடன் நடித்துள்ளார். இவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் கமிட்டானார். ஆனால் அதில் அவருக்கான காட்சிகள் இல்லை என்பதால் இந்தியன் 3 இல் அவர் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. ராமாயணா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் காஜலுக்கு கவுதம் என்பவருடன் திருமணமாகிவிட்டது. இவர்கள் மும்பையில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் மாலத்தீவு சென்று கவர்ச்சியான புகைப்படங்களை காஜல் வெளியிட்ட போதிலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.
இதனால் காஜல் படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் ஜிம்மில் அவர் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலானது. அது போல் அவர் உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் தொடங்கிவிட்டார்.
இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின. அதிலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் வைரலான நிலையில் நடிகை காஜல் அதிர்ச்சி அடைந்து விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட்டில் "நான் விபத்தில் சிக்கியதாகவும் இறந்துவிட்டதாகவும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதை நான் அறிவேன். இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.
கடவுள் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன், உயிருடனும் பாதுகாப்புடனும் இருக்கிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். எனவே தவறான செய்திகளை யாரும் நம்பவோ பரப்பவோ வேண்டாம் என தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். அதற்கு பதில் நேர்மறை விஷயங்களையும் உண்மையையும் நாம் பரப்புவோம்" என தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால், தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வரும் பிரபலமான ஒரு இந்திய நடிகை. இவர் தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் அதிகம் நடித்துள்ளார்.

இவரைப் பற்றிய சில தகவல்கள்:
- திரைப்பட வாழ்க்கை: 2004-ல் ஹிந்தித் திரைப்படமான கியூன்! ஹோ கயா நா...-வில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர், 2007-ல் தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில், 2008-ல் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
- பிரபலமான படங்கள்: தமிழ் மற்றும் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களும், தெலுங்கில் மகதீரா, பிருந்தாவனம், ஆர்யா 2 போன்ற படங்களும் இவருக்குப் பெரிய அளவில் புகழைத் தேடித்தந்தன.
- தனிப்பட்ட வாழ்க்கை: 2020-ஆம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
- சமீபத்திய வதந்தி: சமீபத்தில் காஜல் அகர்வால் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அவர் நலமாக இருப்பதாக அவரது தரப்பிலிருந்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
காஜல் அகர்வால், தனது நடிப்புத் திறமை மற்றும் அழகால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒரு முன்னணி நடிகை.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications