இப்படியெல்லாம் பணம் சம்பாதித்து என்ன செய்ய போறீங்க?.. பயில்வான் ரங்கநாதனை கிழித்த கலா மாஸ்டர்
சென்னை: பிரபலங்களை அதிலும் குறிப்பாக நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை டான்ஸ் மாஸ்டர் கலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
காமெடி, வில்லன் வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மகிழ்வித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமா பத்திரிகையாளராகவும் உள்ளார்.
இவர் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு சினிமா குறித்து பேசி வருகிறார். அதில் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பற்றி மிகவும் அவதூறாக பேசி வருகிறார். ஒரு முறை ராதிகாவின் தாய் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.

ராதிகா
இதனால் கொந்தளிப்பில் இருந்த ராதிகா, ஒரு நாள் திடீரென திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் ரங்கநாதனை நேருக்கு நேர் எதேச்சையாக சந்தித்துவிட்டார். உடனே பயில்வானை பொது இடம் என்றும் பாராமல் ராதிகா வெளுத்து வாங்கினார். இதே போல் பயில்வான் ரங்கநாதன், பாடகி சுசித்ராவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

சுசித்ரா
உடனே சுசித்ரா, பயில்வானை போன் போட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும் தொடர்ந்து பெண்களை அவதூறாக பேசி வரும் பயில்வானை கைது செய்ய வேண்டும் என சுசித்ரா புகார் கொடுத்துள்ளார். இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயரையும் பயில்வான் மிகவும் மோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்தார்.

திருவான்மியூர் பீச்
இதையடுத்து திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை நேருக்கு நேர் சந்தித்த ரேகா நாயர், "நான் எப்படி வேணாலும் நடிப்பேன். அதை கேட்க நீ யாரு, என் அப்பனா, புருஷனா என கேட்டார். இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரேகா நாயர் , செருப்பு பிஞ்சிடும் என பயில்வானை திட்டினார்.

மீனாவின் கணவர்
அது போல் நடிகர் மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் அண்மையில் இறந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசியது அனைவரையும் கோபத்துக்குள்ளாக்கியது. இந்த நிலையில்தான் பயில்வானை கலா மாஸ்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கலா மாஸ்டர்
அவர் கூறுகையில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ திரைப்படங்களில் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை பற்றி விமர்சனம் செய்வது தவறில்லை. அது போல் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றாலும் அதைக் கேட்பதும் தவறு கிடையாது. ஆனால் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது தவறு.

வியூஸ் கிடைக்கிறதா?
இவ்வாறு ஒருவரை காயப்படுத்தி பேசுவதால என்ன சந்தோஷம் கிடைக்க போகிறது. நான் அது போல் யாரையும் பேச மாட்டேன். அது போல் பேசுபவர்களின் யூடியூப் வீடியோக்களையும் பார்க்க மாட்டேன். அப்படி பேசுபவர்களை பார்த்தால் எனக்கு கோபம்தான் வரும். நீங்களே போடும் வீடியோக்களுக்கு நிறைய வியூஸ் வருவதால் அதிக பணம் கிடைக்கிறதா? மற்றவர்களை கஷ்டப்படுத்தி அதில் வரும் காசை வைத்து என்னதான் செய்ய போறீங்களோ என கலா மாஸ்டர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications