வங்கி கணக்கில் ரூ.1 வந்துடுச்சா? உங்களுக்கு ரூபாய் 1000 கன்பார்ம்.. மகளிர் உரிமைத்தொகை மேஜர் அப்டேட்
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வங்கிக் கணக்குகளில் ரூ.1000 வரவு வைக்கப்பட உள்ளது. புதிய பயனாளிகளின் வங்கி கணக்கில் முதலில் ரூபாய் 1 அனுப்பி பரிசோதிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வரும் டிச.15 முதல் ரூ,1,000 வழங்கப்பட உள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 1 அனுப்பி, கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என சோதிக்கப்படும். உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த உங்களுக்கு வங்கி கணக்கில் 1 ரூபாய் வந்திருந்தால் உங்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும்.

தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் மகளிர் உரிமை தொகையாக தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.
சுமார் 1.15 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் பல லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்கள், தளர்வுகள் அறிவிக்கப்படவர்கள் என ஏராளமானோர் புதிதாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். புதிதாக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடந்து கொண்டிருப்பதால் அவர்கள் தங்களுக்கு எப்போது மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற தகவலை முதல்வர் ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இதனால், உரிமைத்தொகை திட்டத்துக்கு புதிதாக விண்ணப்பித்த பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உரிமைத்தொகை திட்டத்திற்கு இறுதி செய்யப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் அவர்களின் வங்கி கணக்குக்கு 1 ரூபாய் அனுப்பப்படும். கடந்த முறையும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட பெண் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு முதலில் 1 ரூபாய் அனுப்பப்பட்டது.
அப்படி யாருக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்திருக்கிறதோ அவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என பெண்கள் அறிந்து கொள்ளலாம். தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 1 அனுப்பி, கணக்கு செயல்பாட்டில் உள்ளதா என சோதிக்கப்பட்டு வருகிறது.
உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்த உங்களுக்கு வங்கி கணக்கில் 1 ரூபாய் வந்திருந்தால் உங்களுக்கு இனி மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும். இந்த வாரம் முழுக்க இந்தப் பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!












Click it and Unblock the Notifications