சூட்டோடு சூட்டாக 2 நச் அறிவிப்புகள்.. இல்லத்தரசிகள் குஷி.. அதுக்குள்ளயே மீட்டிங்.. தமிழக அரசு ஸ்பீடு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்த 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பயிற்சி கூட்டங்களும் மாவட்டங்களில் ஆரம்பமாகி உள்ளதால், இந்த திட்டம் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத்தொகை வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆனால் சில நிபந்தனைகளை விதித்துள்ளதால், இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

விமர்சனம்: இந்த திட்டத்தை அறிவித்து 2 வருடம் ஆகியும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவில், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது என்பதற்காக, உரிமைத்தொகை தற்போது கையில் எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கிறார்கள். அத்துடன், தகுதி அடிப்படையில் மகளிருக்கு ஒதுக்கக்கூடாது, அனைவருக்குமே தர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ துவங்கி உள்ளன..
"மகளிருக்கு 1000 ரூபாய் என்று இவர்களாகவே அறிவித்துவிட்டு இப்போது 12 கண்டிஷன் போடுகிறார்கள். எந்த குடும்ப தலைவியாவது இவர்களிடம் எங்களுக்கு மாதம் ரூ 1000 கொடுங்கள் என்று கேட்டார்களா? இவர்களாகவே அறிவித்துவிட்டு இப்போது நிலம் இருக்கக் கூடாது, வீடு இருக்கக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? இதெல்லாம் இருந்தால் நாங்கள் ஏன் ரூ 1000 கேட்க போகிறோம். இதெல்லாம் அந்த மக்களை அவமானப்படுத்தும் செயல். உதவித்தொகையை பெற பிச்சைக்காரியா இருக்கணும் போல" என்று நாம் தமிழர் கட்சியின் சீமான், விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.
இந்நிலையில், இந்த திட்டத்துக்காக 7,000 கோடி ரூபாய் நிதி மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணையாக வெளியிடப்பட்டுவிட்டது.. அத்துடன் தன்னார்வலர்களை இந்த பணியில் ஈடுபடுத்த போவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது கூடுதல் மகிழ்ச்சியை பரவலாக ஏற்படுத்தி வருகிறது.
அரசாணை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு உதவும் வகையில், ரேஷன் கடைகளில் தன்னார்வலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், நியாய விலைக்கடைகளில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற சிறப்பு முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும். தன்னார்வலர்கள் இல்லாத ரேஷன் கடை பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளை கண்டறியும் பொருட்டு சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக திட்டத்தின் சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.. அத்துடன், விருப்பம் உள்ள தன்னார்வலர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும், விருப்பம் இல்லாத தன்னார்வலர்களை விண்ணப்ப பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, தன்னார்வலர்களுக்கு 2 கி.மீ.க்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்கவும், தன்னார்வலர்கள் விருப்பப்பட்டால் 2.கி.மீ தொலைவுக்கு மேல் பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாய விலைக்கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு முறைகளை அறிவித்ததுமே, 7000 கோடி ஒதுக்கீடு செய்து சூட்டோடு சூட்டாக அரசாணை வெளியிட்டதும், ரேஷன்தாரர்களுக்கு உதவியாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதையடுத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கு, ரேஷன் கடைகள் அருகே சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது..
பயிற்சிகள்: அந்தவகையில், இந்த இப்பணியில் ஈடுபட போகிறவர்கள், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, மாவட்ட அளவிலான முதன்மை பயிற்சியாளர்கள் கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.. அப்போது, கலெக்டர் கிராந்திகுமார் பேசும்போது, மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பம், ரேஷன் கடை ஊழியர்களால், அந்தந்த கடைக்கு உட்பட்ட கார்டுதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்படும்.
இதற்கென தமிழக அரசு சார்பில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்க, ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைகக்கப்படும். இப்பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இல்லாதவர்களாக இருந்து, மிகவும் வறுமையில் உள்ளவர்களாக இருக்கலாம்.
பயிற்சி முகாம்கள்: அவர்களை போன்றவர்கள் விபரத்தை, தனி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அவர்களும் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும். வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, விண்ணப்பம் ஏற்றுக் கொண்ட பிறகு கூட, வங்கி கணக்கு துவக்கிக் கொள்ளலாம் என்றார். இதையடுத்து, கோவையையடுத்து, பிற மாவட்டங்களிலும், பயிற்சியாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications