மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது! எஸ்எம்எஸ் வந்தாலும் பணம் வராது! இந்த தப்பை செய்யவே கூடாது!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தற்போது கள ஆய்வு தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பலருக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குறுஞ்செய்தி (SMS) வந்துள்ளது. இந்நிலையில், விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பரீசிலனையின் போது சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு நடத்தும் முக்கிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யவுள்ளது. முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான 2023 செப்டம்பர் 15 முதல் தொடங்கிய இத்திட்டம், தற்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இரண்டு ஆண்டுகளில் மட்டும், 1.15 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையை பெற்றுள்ளனர். இது குடும்பச் செலவுகளைச் சுமக்கும் பெண்களுக்கு உண்மையான ஆதரவாக மாறி, பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை
கடந்த ஆண்டு சில தகுதியான பெண்கள் திட்டத்தில் சேராத நிலையில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த முகாம்கள் 2025 ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 லட்சம் பேர் புதிய பயனாளர்களாக விண்ணப்பித்துள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை உறுதிப்படுத்தி, "40% மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக மட்டுமே வந்துள்ளன. புதிய பயனாளிகளுக்கான தகவல் சில மாதங்களில் வெளியிடப்படும். கடந்த முறை விடுபட்ட அனைவருக்கும் இம்முறை தொகை வழங்கப்படும்" என்றார்.
புதிய விண்ணப்பங்கள்
இந்நிலையில், புதிய பயனாளிகளுக்கு நவம்பர் மாத முடிவில் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையே டிசம்பர் அல்லது பொங்கல் பரிசாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பலருக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக குறுஞ்செய்தி (SMS) வந்துள்ளது. இந்நிலையில், விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், பரீசிலனையின் போது சிலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய நிபந்தனைகள்
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். அந்த வகையில், 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ரேஷன் கார்டில் குடும்பத் தலைவியாக பெயர் உள்ள பெண் அல்லது குடும்பத் தலைவரின் மனைவி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள், வருமான வரி தாக்கல் செய்யாதோர், குடும்பத்தில் 4 சக்கர வாகனங்கள் (கார், ஜீப், டிராக்டர்) இல்லாதிருப்பவர்கள், 5 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருத்தல், வீட்டில் ஆண்டு மின்சாரம் 3,600 யூனிட்டிற்கும் குறைவாக உபயோகப்படுத்துபவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
மனு பரிசீலனை
மத்திய/மாநில அரசு, பொதுத்துறை, வங்கிகள், கூட்டுறவு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், விதவை, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள், வருமான வரி தாக்கல் செய்பவர்கள், ஆகியோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்பதை கவனிக்க வேண்டும்.
விண்ணப்ப நிலை
மேலும், கீழ்கண்ட ஆவணங்களை சரியாக இணைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பிறந்த தேதி ஆதாரம் (SSLC, வாக்காளர் அடையாளம், பிறந்த சான்றிதழ்), வங்கி கணக்கு விவரம், தற்போதைய புகைப்படம், செயல்பாட்டில் இருக்கும் மொபைல் எண், இறப்புச் சான்றிதழ் (கணவர் இறந்த பெண்களுக்கு), மாற்றுத்திறனாளி/திருநங்கை சான்றிதழ் (தேவையெனில்), மின் கட்டண ரசீது (மின்சாரம் பயன்பாட்டை நிரூபிக்க), நிலம் பற்றிய ஆதாரம் (தேவையெனில்), ஆகியவை மிகவும் அவசியம். தவறான மொபைல் எண் கொடுக்கப்பட்டால், பணம் வந்தாலும் அறிவிப்பு சரியானவருக்கு செல்லாது. வங்கி கணக்கு விவரம் தவறானால் தொகை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications