மகளிர் உரிமைத் தொகை.. பொங்கல் பரிசு தரப்போகும் தமிழக அரசு.. அதிகரிக்கும் பயனாளர்கள்
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் ரூ.1000 ரூபாய் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. விடுபட்ட பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைக்கு அழைக்கும் போது உரிய ஆவணங்களுடன் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. நிதி நிலையை காரணம் காட்டி அந்த திட்டத்தை நிறுத்தி வைத்தது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது.

குடும்ப பெண்களுக்கு உதவும் வகையிலான இத்திட்டமானது, கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தன்று துவங்கப்படும் என்று 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாமும் மாநிலம் முழுவதும் ஜூலை 24 முதம் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது.
இத்திட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மணியார்டர்கள், வங்கி கணக்குகள் என்று பல்வேறு முறைகளில் பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் இத்தொகையை பெற தவறியவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இதன் அடிப்படையில் அக்டோபர் 2 ஆம் தேதி சேர்க்கப்பட்ட புதிய விண்ணப்பதாரர்களுக்கு அந்த மாதமே 14 ஆம் தேதி இவ்வுரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதிலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு நிர்ணயித்த அத்திட்ட விதிகளின் கீழ் வராதவர்களாக நிராகரிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு தகுதி இருந்தும் விண்ணப்பித்தும் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று அதிகாரிகளிடத்தில் பெண்கள் முறையிட்டதன் பேரில் அதற்கான மறு வாய்ப்பும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. அதன் மூலம் 11.85 லட்சம் மகளிரிடம் இருந்து கலைஞர் மகளிர் உரிமை தொகையின் மேல்முறையீட்டு விண்ணப்பமானது மீண்டும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னை கலைவாணர் அரங்கில் மகளிர் உரிமைத் தொகை 2ஆம் கட்டத்தை தொடக்கி வைத்தார். ஏற்கெனவே இருந்த பயனாளர்களுடன் தற்போது புதிதாக 7.35 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தால் பயன் பெற்று வருகின்றனர்.
தங்களுக்கு இந்த மாதமாவது 1000 ரூபாய் பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த இல்லத்தரசிகள் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் இம்முறையும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா எப்போது விண்ணப்பிப்பது என்ற கேள்விகள் எழுந்தன. இந்த சூழலில் தமிழக அரசின் சார்பில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த குறுஞ்செய்தியில், "வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இது குறித்த விசாரணைக்கு தங்களைத் தொடர்பு கொள்ளும் பொழுது உரிய தகவல்களைத் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தங்களது மேல்முறையீட்டு மனு பரிசீலிக்கப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் மகளிர் உரிமைத் தொகையின் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊனமுற்றோர் உதவித் தொகை பெறுவோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாமல் உள்ள நிலையில் அவர்களையும் பயனாளர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இல்லத்தரசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும் என்று தமிழக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications