"மாஸ்டர் பிளான்".. கலைஞர் உரிமை தொகைக்கு ரூ.1 லட்சம் வசூல்? "தொலைச்சிருவோம்".. உடனே வந்த தமிழக டிஜிபி
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து பரவி வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று தமிழக காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பத்தை பதிவு செய்யும் முகாமை முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்ப பதிவு அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைந்துள்ளது.

விண்ணப்பங்கள்: இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் ஆகஸ்ட் 1 முதல், 2ம் கட்ட விண்ணப்ப விநியோக பணிகள் ஆரம்பமாகி உள்ளன.. இந்த முகாம்கள் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தும் வருகின்றனர்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடி குடும்ப தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் அதிக பரவி வருகிறது.
வாகன ஓட்டிகள்: அதாவது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு மாதந்தோறும் சுமார் 1 கோடி பெண்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்பதால் நிதி திரட்டுவதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், வாகன ஓட்டிகளிடம் தினமும் ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று டார்கெட் விதித்து உத்தரவு போட்டிருப்பதாக ஒரு தவறான தகவல் பரவியது. இதற்குதான், தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்..
எச்சரிக்கை: இந்த திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
31.07.2023 தேதியிட்ட ஒரு செய்தித்தாளில், மகளிர் உரிமைத்தொகை வழங்க "மாஸ்டர் பிளான்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறானது.
தவறான தகவல்கள்: இதனிடையே, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றி சிலர் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக புகார்கள் எழுந்தன. மகளிர் உரிமைத் தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது என்றும் அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
அதிரடி உத்தரவு: தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரிமைத்தொகை திட்டத்தை, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர், முதல்முதலாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டபோதே, இதை பலரும் விமர்சித்திருந்தனர்.. சிலர் இதை சோஷியல் மீடியாவில் கிண்டலடித்திருந்தனர்.
குறிப்பாக, தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறியிருந்ததை வைத்து, "வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர்" என்கிற ட்விட்டர் பக்கத்தில் செந்தில், கவுண்டமணி நடித்த நகைச்சுவை காட்சி ஒன்றை ஒப்பிட்டு கிண்டல் பதிவு வெளியிடப்பட்டிருந்தது.
அதிரடி கைது: இந்த வீடியோ வைரலான நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தமிழக அரசின் மீது அவதூறு பரப்பும் வகையிலும் இந்த வீடியோ அமைந்திருப்பதாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து, பிரதீப் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications