கலைமாமணி விருதை காணோம்.. பணமும் போச்சே.. வீட்டின் உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு குற்றச்சாட்டு!
சென்னை: தமிழக அரசால் வழங்கப்பட்ட கலைமாமணி விருது, பணம், பொருட்களை காணவில்லை என்று நடிகர் கஞ்சா கருப்பு வீட்டின் உரிமையாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார். முறையாக வாடகை கொடுத்துவிட்டதாக கூறிய அவர், கொலை மிரட்டல் கொடுத்ததாக கூறும் ஆடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு. 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர், சென்னையில் மதுரவாயல் பகுதியில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில், இந்த வீட்டில் தங்கி படப்பிடிப்புக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர் தரப்பில் தனது வீட்டை நடிகர் கஞ்சா கருப்பு லாட்ஜாக மாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு காவல்துறையினருடன் தனது வீட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில், கலைமாமணி விருது, ரேஷன் கார்டு, பணம், பொருட்கள் எல்லாம் காணவில்லையே.. அய்யோ.. போச்சு.. வீட்டு ஓனர்ணா என்ன வேண்டும்னாலும் பண்ணுவாங்களா.. என்று புலம்புகிறார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கஞ்சா கருப்பு பேசுகையில், நான் மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உர்டிமையாளர் கூறும் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் பணமே கொடுக்கவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். ஆனால் நான் ரூ.40 ஆயிரம் கடந்த மாதம் கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.
வீட்டின் சாவி என்னிடம் இருக்கும் போது, வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகளால் பெற்ற கலைமாமணி விருதினை காணவில்லை. ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புக், ஆதார் கார்டு என்று எதையும் காணவில்லை. நான் எனது வாடகை பணத்தை வீட்டின் உரிமையாளரிடம் கொடுத்துவிட்டேன்.
அதனை மீறி வீட்டின் கதவை உடைத்து உரிமையாளர் அடாவடியாக நடந்து கொண்டுள்ளார். எந்த வீட்டின் உரிமையாளராவது வாடகை கொடுத்த வீட்டின் கதவை உடைத்து திருடுவார்களா? நான் குடும்பத்துடன் தான் இங்கு இருந்திருக்கிறேன். விபச்சாரம் செய்யவில்லை எனது பொருட்களை காணவில்லை. கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறும் ஆடியோ, என்னை போலவே யாரையோ வைத்து பேசி சித்தரிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications