கலாஷேத்ரா பாலியல் புகாரை விசாரிக்க வரும் லத்திகா சரண்..மூவர் டிஸ்மிஸ்..மாணவிகளுக்கு திருப்தி தருமா?
சென்னை: பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய விசாரணை குழுவினை கலாஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகம் அமைத்துள்ளது. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்களில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மூன்று உதவி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் புகழ் பெற்ற மிகப்பெரிய அறக்கட்டளை நிறுவனமாக கலாஷேத்ராவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவ-மாணவிகள் 4 தினங்களுக்கு முன்பாக திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கல்லூரிக்கு வந்த காவல்துறையினர் கல்லூரி நிர்வாகிகளை பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். 2 நாட்கள் போராட்டம் நீடித்தது. ஊடகங்களிலும் மாணவிகள் போராட்டம் குறித்த செய்திகள் வெளியானது. இரண்டு நாட்கள் இரவு பகலாக போராட்டம் நீடித்தது. எங்களுக்கு நீதி வேண்டும் எனவும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் கூறினர். மாணவிகளின் போராட்டம் தீவிரமடையவே கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சட்டசபையில் அறிவிப்பு
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கலாஷேத்ரா விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை. இந்த விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மகளிர் ஆணையம் விசாரணை
இதைத்தொடர்ந்து சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளிடம் மகளிர் ஆணையத்தின் தலைவி குமாரி நேரில் விசாரணை நடத்தினார். 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மகளிர் ஆணைய தலைவி, மாணவிகள் நான்கு பேர் மேல் புகார் கூறியுள்ளனர். மாணவிகள் கட்டுக்கட்டாக புகார் அளித்துள்ளனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

கேரளா மாணவி புகார்
கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் இவர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாக மாணவிகள் புகார்கள் அளித்தனர். இதை வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். குறிப்பாக ஹரி பத்மன் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

ஹரி பத்மன் கைது
கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய காவல்துறையினர் திட்டமிட்டனர். காவல்துறையினர் தேடுவதை அறிந்து அங்கிருந்து அவர் மாயமானார். இதனையடுத்து தனிப்படை போலீசார் அவரை தேடத்தொடங்கினர். அவரது செல்வோன் சிக்னல்களை கண்காணிக்கத் தொடங்கினர் செல்போன் சிக்னலை வைத்து பெண் தோழி வீட்டில் பதுங்கியிருந்த ஹரிபத்மனை கைது செய்தனர். தன் மீது புகார் கூறிய அனைவரிடம் சகஜமாக மட்டுமே பழகினேன் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஹரிபத்மன் கூறியுள்ளார்.

விசாரணை குழு அமைப்பு
இதனிடையே பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபரி கண்ணன் முன்னாள் டிஜிபி லத்திகா சரண், மருத்துவர் ஷோபா வர்த்தமான் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று பாலியல் புகாருக்கு ஆளான பேராசிரியர்களில் ஹரிபத்மன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மூன்று உதவி ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாணவிகளுக்கு திருப்தி தருமா?
இதனிடையே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நான்கு பேரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது மாணவிகள் கோரிக்கை. அதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே கல்லூரிக்கு வருவோம் என்றும் மாணவிகள் தெரிவித்துள்ளனர். 5ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பு திருப்தி தருமா? மாணவிகள் கல்லூரிக்கு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications