நாங்க ஓடலை, ஒளியலை.. இங்கதான் இருக்கோம்.. நல்லாருக்கோம்.. வீடியோ மெசேஜ் விட்ட கல்கி சாமியார்
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று கல்கி சாமியார் வீடியோ வெளியிட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "நான் ஓடிபோகவில்லை.. ஒளியவும் இல்லை..இங்கதான் இருக்கேன்.. நல்லா இருக்கேன்" என்று கல்கி ஆசிரம சாமியார் வீடியோ வெளியிட்டுள்ளார்.
30 வருஷத்துக்கு முன்னாடி, ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் என்ற கல்வி ஆசிரமத்தை நிறுவிய விஜயகுமார், விஷ்ணுவின் அவதாரம் என்று தன்னை அறிவித்து கொண்டார்.
ஆனால், இந்த ஆசிரமம் தொடர்பாக செக்ஸ் புகார்கள், போதை பொருட்கள் புழக்கம், எசகுபிசகு வீடியோக்கள் வெளியே வந்து, கோர்ட், கேஸ்வரை போனது. சில வருடங்களாகவே சாமியார் மகன் கிருஷ்ணாவின் பிடிக்குள் ஆசிரம பொறுப்பு சென்றது.

பக்தர்கள்
இதன் மூலம் மாணவர்களுக்கு ஆசியர்கள் பாடங்கள் தொடர்பான காட்சிகளை இணையதளம் வழியாக கணிணி திரையில் ஒளிபரப்பி கற்பித்து வருகிறார்கள். பாடம் குறித்த சந்தேகங்களை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.

ரெய்டு
இதையடுத்துதான் போன வாரம் ஆசிரமத்தில் திடீர் ரெய்டு வந்துவிட்டது.. 40 கல்கி ஆசிரமங்களிலும் 400 அதிகாரிகள் சோதனை நடத்தி 500 கோடியை கைப்பற்றி, அது சம்பந்தமான வீடியோவையும் வெளியிட்டனர். ஆனால், இதில் 800 கோடி சொத்துக்களுக்கு கணக்கு இல்லையாம். மகன், மருமகள் விசாரணைக்கும் ஒத்துழைக்கலையாம்.

விசாரணை
ஆவணங்களில் கையெழுத்தும் போடலையாம். சாமியாரை விசாரிக்கலாம் என்றால் ஆளை காணோம். அவர் நேமம் ஆசிரமத்தில்தான் தங்கிருப்பதாக ஆசிரம ஊழியர்கள் சொல்கிறார்களாம். எனினும் பகவான் இங்கதான் இருக்கிறாரா, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா என்ற சந்தேகங்கள் பக்தர்கள் மத்தியிலேயே எழ ஆரம்பித்துவிட்டது.

விளக்கம்
இந்நிலையில் சாமியார் திடீரென ஒரு வீடியோ வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சாமியார், ஒரு சோபாவில் அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் இந்த வீடியோவில் பேசுகிறார். அதில், "நாங்க நாட்டை விட்டு ஓடிவிடவில்லை. வேறு எங்கேயும் போகவும் இல்லை.. இங்கேதான் இருக்கிறோம்; நேமத்தில் இருக்கிறோம்.. நல்லா இருக்கோம்.. நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கோம்.. எந்த பிரச்சனையும் இல்லை.. இதை பக்தர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஊடகங்கள்
எங்கள் பக்கம் நின்ற பக்தர்களுக்கு நன்றியை சொல்லி கொள்கிறோம். அதேபோல சோஷியல் மீடியாவில் நல்ல கருத்துகளை தெரிவித்தவர்களுக்கும் எங்கள் நன்றி. நாங்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டதாக வதந்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. நாங்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக அரசாங்கமோ, அல்லது தகவல் தொழில்நுட்ப துறையோ சொல்லவில்லை. ஊடகங்கள்தான் அப்படி சொல்கின்றன. நாங்கள் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை.

தீர்வு
எங்களுக்குத் தெரியும். இந்தியா மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நாங்கதான் பலம். அவர்கள் எங்களை சார்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நாங்கள் தீர்வை தருகிறோம்" என்றார். இவ்வளவு பெரிய நீண்ட விளக்கத்தை சொன்ன சாமியார், சிக்கிய அந்த 500 கோடி பற்றி எதுவுமே சொல்லவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications