‛‛மெத்தனால் சப்ளையர் இவர்தான்’’.. கள்ளச்சாராய வழக்கில் சென்னையில் முக்கிய குற்றவாளி கைது! யார் இவர்?
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் தான் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மெத்தனால் சப்ளையரை சென்னையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர் யார்? என்பது திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் குடித்த நிலையில் உடல்நலக்குறைவால் மறுநாளில் இருந்து ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இன்று காலை வரை மொத்தம் 57 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 157 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதில் 17 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 107 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த கள்ளச்சாராய மரணம் மற்றும் பாதிப்பு விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், விஜயா, தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னத்துரை, மாதேஷ் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையின்போது மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதும், புதுச்சேரி மற்றும் சென்னையில் இருந்து மெத்தனால் கொண்டு வரப்பபட்டதும் தெரியவந்துள்ளது. நேற்றைய தினம் சிக்கிய மாதேஷிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் கொண்டு வரப்பட்டு கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இத்தகைய சூழலில் தான் மாதேஷ் கொடுத்த தகவலின்பேரில் மெத்தனால் சப்ளை செய்ததாக சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிவக்குமார் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தான் சென்னையில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிதாக கூறப்படுகிறது. தற்போது சிவக்குமாரை மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்று சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications