கடைசியாக காரில் புறப்பட்டு சென்ற கள்ளக்குறிச்சி எம்எல்ஏ.. விஜய் விட்ட டோஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: த.வெ.க. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் எம்.எல்.ஏ.க்களை முதல்வர் விஜய் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். திரையால் மூடப்பட்ட அறையில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் முதல்வர் விஜய் தனித்தனியாக அழைத்துப் பேசினார். முதலில் பெண் எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துகளைக் கேட்டார். தொடர்ந்து மற்றவர்களிடமும் பேசினார். நேற்றைய கூட்டத்தில் துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் விஜய் தனியாக அழைத்துப் பேசினார். கூட்டத்தின் முடிவில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடைசியாக காரில் புறப்பட்டுச் சென்றார்.

த.வெ.க. ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆறு மாதங்களில் விஜய் எதிர்கொண்ட இரண்டு பெரிய பிரச்சினைகள் என்றால், ஒன்று சட்டம்-ஒழுங்கு. இன்னொன்று எம்.எல்.ஏ.க்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள். இதில் எம்.எல்.ஏ.க்களின் சர்ச்சைக்குரிய செயல்பாடுகள் மிகக் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. ஒருபுறம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சில த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சையில் சிக்கியதால் விஜய் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்.

Vijay TVK Mahabalipuram

குறிப்பாக, துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னிடம் புகார் கொடுக்க வந்தவரைத் தாக்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ளது. இந்த இரண்டு விவகாரங்களும் மக்கள் மத்தியிலும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன. எதிர்க்கட்சிகளைத் தாண்டி, கூட்டணிக் கட்சிகள்கூட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தின.

இப்படியான சூழலில்தான் நேற்று த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற சொகுசு விடுதிக்குள் எம்.எல்.ஏ.க்களைத் தவிர வேறு யாரும் நுழைய முடியாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. எம்.எல்.ஏ.க்களுக்குக்கூட செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்துக்கு முதல்வரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் 105 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திரையால் மூடப்பட்ட அறையில் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரையும் முதல்வர் விஜய் தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார். முதலில் பெண் எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளார். தொடர்ந்து மற்றவர்களிடமும் பேசியுள்ளார். பலர் தங்கள் தொகுதிகளில் செய்த பணிகள் குறித்து விவரித்துள்ளனர். இறுதியாக, சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ.க்களை விஜய் தனியாக அழைத்து மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார். பின்னர் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து முதல்வர் விஜய் பேசியதுடன் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

"பொதுமக்கள் மத்தியில் நமக்கு இருக்கும் நல்ல பெயரை நாமே கெடுத்துக்கொள்ளக்கூடாது. சேவை செய்யத்தான் இங்கு வந்திருக்கிறோம். பொது இடங்களில் நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். கட்சிக்குக் கெட்ட பெயர் வரும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள். தேவையற்ற சர்ச்சையில் சிக்காதீர்கள். எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் சிக்கிவிடாதீர்கள். ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கும் தி.மு.க.வின் முயற்சிகளுக்கு வழிவகுத்துவிடாதீர்கள். மக்கள் பணி தான் நமக்கு முக்கியம். உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளது. விரைவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

அதிகாரிகளுக்கு எந்த வகையிலும் தொந்தரவு கொடுக்கக்கூடாது. பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொந்தரவு கொடுப்பது யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். இதை எச்சரிக்கையாகவே உங்களிடம் கூறுகிறேன்" என்று முதல்வர் விஜய் பேசியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, சர்ச்சைக்குள்ளான துணை சபாநாயகர் ரவிசங்கர், கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆகிய இருவரையும் முதல்வர் விஜய் தனியாக அழைத்து மிகக் கடுமையாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. மாலை 6.10 மணிக்கு கூட்டம் நிறைவடைந்ததும், முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றனர். இதில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கடைசியாக காரில் புறப்பட்டுச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+