தமிழகத்தில் தூய்மையான நகரம் எது? குடியரசுத் தலைவரிடம் விருது பெற்று நகராட்சி பெண் ஆணையர் சாதனை
டெல்லி: 2025- 2026 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்றைய தினம் வழங்கினார். அதில் விருதை வென்ற தமிழக நகரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். 2016ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 4,751 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆய்வுகள் செய்யப்பட்டன. கடந்த 2016ஆம் ஆண்டு 73 நகரங்களுடன் இந்த ஆய்வுகள் தொடங்கப்பட்டன. தற்போது 10ஆவது ஆண்டாக தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது.

இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு நாட்டின் மிகத் தூய்மையான நகரங்கள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள் 10 பிரிவுகளின் கீள் ஆய்வு செய்யப்படுகிறது. அதாவது திடக்கழிவு மேலாண்மை, கண்ணுக்குத் தெரியும் சுத்தம், கழிவு நீர் மேலாண்மை, தூய்மை பணியாளர்களின் நலன், மக்களின் பங்களிப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு விருதுகள் வழங்கப்படுகிறது. அது போல் மக்கள் தொகையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.
என்னென்ன பிரிவுகள்?
இந்த விருதுகள் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளில் தூய்மையான நதிக்கரை நகரம், தூய்மையான கடற்கரை நகரம், தூய்மையான இமயமலை நகரம், மாநிலத்தின் முதன்மைத் தூய்மை நகரம் என்ற சிறப்பு பிரிவுகளிலும் விருது வழங்கப்படுகிறது.
இந்தூரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்ற நவி மும்பை
அந்த வகையில் இந்த ஆண்டு மகாராஷ்டிராவின் நவி மும்பை முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் முதலிடத்தை இருந்தது. தற்போது நவி மும்பைக்கு முதலிடமும் குஜராத்தின் சூரத்திற்கு 2ஆவது இடமும், ஆந்திராவின் விஜயவாடாவுக்கு 3ஆவது இடமும் கிடைத்துள்ளது.
10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பிரிவில் ஆந்திராவின் விசாகப்பட்டினம், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர், உத்தரப்பிரதேசத்தின் லக்னோர் ஆகிய நகங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உஜ்ஜையினிக்கு முதலிடம்
அது போ் 3 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரசேதத்தின் உஜ்ஜையினி நகரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. சண்டீகர் 2ஆவது இடம், குண்டூருக்கு 3ஆவது இடம் ஆகும்.
50 ஆயிரம் முதல் 3 லட்சம் வரையிலான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் மத்திய பிரதேசத்தின் திவாஸ் முதலிடத்தை பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள என்டிஎம்சி, மத்திய பிரதேசத்தின் சாகர் ஆகியவை முறையே 2, 3ஆவது இடங்களை பெற்றுள்ளது.
விதாவுக்கு முதலிடம்
20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவின் விதாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஒடிசாவின் அஸ்கா, கோவாவின் பனாஜி ஆகிய நகரங்களுக்கு அடுத்தடுத்த இடங்கள் கிடைத்துள்ளன.
தூய்மையான நதிக் கரை நகரங்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தின் ரேவா முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இடங்களும் இடம் பெற்றுள்ளன.
தேனி அல்லிநகரம்
தூய்மையான கடற்கரை நகரங்கள் பிரிவில் ஒடிஸாவின் பூரிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கேரளாவின் ஆலப்புழாவுக்கு 2ஆவது இடமும், மகாராஷ்டிராவின் ரத்னகிரிக்கு 3ஆவது இடமும் கிடைத்துள்ளன. தமிழகத்தின் தூய்மையான நகரமான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அல்லிநகரம் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த நகருக்கான விருதை நகராட்சி ஆணையர் பார்கவி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதனால் தேனி அல்லிநகரத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.


Click it and Unblock the Notifications
