மருமகன் அனிருத் குறித்து மாமனார் கலாநிதி மாறன் பேசிய வார்த்தைகள்.. பகிரும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி குழுமத்தின் உரிமையாளரான கலாநிதி மாறனின் ஒரே மகளான காவ்யா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் நவம்பர் 11ம் தேதியான நேற்று இனிதே திருமணம் நடந்தது. மிகப்பெரிய பில்லியனரான கலாநிதி மாறனின் மருமகனாகி உள்ளார் அனிருத். இந்நிலையில் தனது மருமகன் அனிருத் குறித்து மாமானார் கலாநிதி மாறன் முன்பு பேசிய ஒவ்வொரு விஷயத்தையும் தற்போது எடுத்து ஷார்ட்ஸ் போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த வகையில் கலாநிதி மாறன் அனிருத் குறித்து முன்பு பேசுகையில், "ஆளை பார்த்து ஜட்ஜ் பண்ணக்கூடாது அப்படீன்னா அது அனிருத் தான்.. பென்சில் மாதிரி இருந்துகிட்டு என்னா வாய்ஸ்.. ஏற்கனவே ஒரு ஆஸ்கர் தமிழ்நாட்டிற்கு வந்திருச்சு..நீங்க இன்னொரு ஆஸ்கர் கொண்டுவரணும் என்று கூறினார்..

Words spoken by father-in-law Kalanithi Maran about son-in-law Anirudh Netizens share the remarks

முன்னதாக ஜெயிலர் ஒன்று ஆடியோ லான்ச்சில் பேசும் போதும், அனிருத்தை கலாநிதி மாறன் வெகுவாக புகழ்ந்தார். அப்படி பேசும் போது, அனிருத், நெல்சனுடன் இணைந்து காமெடி படம் நடிக்க வேண்டும். அப்படி நடித்தால் அந்த படம் பெரிய ஹிட்டாகும் என்று கூறியிருந்தார். இதில் பென்சில் மாதிரி என்று அனிருத் குறித்து கலாநிதி மாறன் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய நாடான கிரீஸ் இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் நாடு. இங்கு ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. அவற்றில் மிகப்பெரியது தான் கிரீட் தீவு. ஏஜியன் கடலில் அமைந்துள்ள பல தீவுகள், கிரீஸ் நாட்டின் முக்கிய அடையாளங்களாக உள்ளன உயரமான மலைகள், நீண்ட கடற்கரைகள், நீல நிறக் கடல் என இயற்கை எழில் கொஞ்சும் நாடான கிரிஸில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது பல பில்லியனர் தம்பதிகளின் கனவு. குறிப்பாக கிரீஸின் சான்டோரினி தீவு, வெளிநாட்டுத் தம்பதிகளின் 'டெஸ்டினேசன் வெட்டிங்' தீவு என்று அழைப்பார்கள். அங்கு தான் நேற்று அனிருத் மற்றும் காவ்யா மாறன் தம்பதியின் திருமணம் நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் , கர்நாடகா முதல்வர், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்கானா மாநில முதல்வர் என பல்வேறு மாநில முதல்வர்களை கலாநிதி மாறன் நேரில் சென்று அழைத்தார். அரசியல் கட்சியினர், திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

காவ்யா மாறன் கலாநிதி மாறனின் மகள் என்று பலருக்கும் தெரியும். அவர் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்தார். லண்டனில் எம்பிஏ முடித்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர், தனது தந்தை கலாநிதி மாறனின் பிசினஸ்களை கவனித்து வருகிறார். ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார். அனிருத்தை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.. பிரபல இசையமைப்பாளரான அனிருத்,தமிழ்நாட்டில் வரிசையாக ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கடைசியாக ஜெயிலர் 2 இசையமைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+