கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு.. தாயாரின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல.. போலீஸார் வாதம்
"சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி மறைத்துள்ளது"
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். மாணவி மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பெற்றோர் கூறியதால், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், மாணவியின் தாயார் செல்வி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை. கொலை குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி மறைத்துள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் தங்களுக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சம்பவம் நடந்த இடம், ஆதாரங்கள் என அனைத்தும் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, எனது மகளின் மரண வழக்கை விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மாணவியின் தந்தை மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிலுவையில் இருப்பதால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" என வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, மாணவியின் தாய் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications