’Sociopath’ வாய்கூசாமல் பொய்! ஆலமரத்தில் முளைக்காது..அண்ணாமலையால் பாஜக வளராது! ‘மாஜி’ நேரடி அட்டாக்!
சென்னை: 20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம் என தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் விமர்சித்துள்ளார்,
மக்களவை தேர்தலுக்கு முன் வரை அதிமுக - பாஜக கூட்டணி சுமூகமாக இருந்த நிலையில் தேர்தலின் போது அக்கூட்டணி பிளவுபட்டது. இதன் காரணமாக இரு கட்சிகளுமே மக்களவை தேர்தலில் பலத்த தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரான தமிழிசை சொன்ன கருத்துகள், தமிழக பாஜகவில் பரபரப்பை கிளப்பின. இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அவரைக் மிகக் கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக திருச்சி சூர்யா சிவா உள்ளிட்ட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதுமட்டுமில்லாமல் அண்ணாமலையை விமர்சித்த நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்த கல்யாணராமனும் நீக்கப்பட்டார். இவர் இஸ்லாம் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் சுமார் 160 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின் தேசிய தலைமையை அண்ணாமலையை ஏமாற்றி வருவதாக கல்யாணராமன் பேச, அதற்குப் பின் தான் அவர் பாஜகவில் இருந்து கடந்த 3 மூன்று வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.
இந்நிலையில் வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம் என தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,"10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்?! சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.
காரணம் ஆரம்ப காலத்தில், இஜட் கேட்டகிரி பாதுகாப்பு வருவதற்கு முன்பே ரெசிடென்சி ஓட்டலில் காபி சாப்பிட செல்வதாக சென்று பேஸ்மெண்டில் ஒளிந்து இருந்த காரில் சென்று மருமகனை மூன்று முறை சந்தித்து செய்து கொண்ட பாஜக-அதிமுக கூட்டணியை முறிப்பேன் என்ற ஒப்பந்தம். அக்கா தமிழிசை மீது வன்மத்தை கக்க வேண்டும் என தன்னை தூண்டியது அண்ணாமலை என்று சூர்யா கூறுவதில் உண்மை இருப்பதாகவே பார்க்கிறேன். அப்படி என்றால் அண்ணாமலை ஒரு பயந்தாங்கொள்ளி என்பது தெளிவாகிறது.
தனக்கு தகுதியை மீறி கிடைத்த பதவியை காப்பாற்றிக் கொள்ள போட்டியாக பிற்காலத்தில் வரவாய்ப்புள்ள நபர்களை கட்சியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டது கட்சிக்குள் அனைவருக்கும் தெரியும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் புதிதாக திரும்ப வந்த டாக்டர் தமிழிசை தனக்கு தலைவலியாக வருவார் என்பதால் அவரையும், மாநில தலைவருக்கு தகுதியான நபராக அறியப்படும் பேராசிரியர் சீனிவாசன் அவர்களையும் சூர்யா தொடர்ந்து தாக்கியது எப்படி?! கட்சிக்குள் ரகசியமாக மாநில தலைவருக்கு புகாராக வந்த ஆடியோக்கள் சூர்யாவிடம் சென்றது எப்படி?!
கடந்த சுமார் 44 ஆண்டுகளில் வன்னியர், முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர்கள் என தமிழகத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 35-40% மக்களை கொண்ட இந்த முப்பெரும் சமுதாயங்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தலைமை ஆலோசித்து வரும் நிலையில் முக்குலத்தோரில் முக்கிய நபராக அறியப்படும் அண்ணன் நயினார் நாகேந்திரன் மீது 4 கோடி பணம் குறித்த பிரச்சனை உருவாக்க காரணம் யார்?!
ஆலமரத்தின் எதுவும் முளைக்காது; அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது. அண்ணாமலையின் தகுதிக்கு சுடுகாட்டிற்கு தான் தலைவனாக இருக்க முடியும். ஏனென்றால், அங்குதான் கேள்வி கேட்காத ஜடங்கள் இருக்கும். அதிகபட்சம் அடிமைகளை வைத்து அண்ணாமலையால் கட்சி நடத்த முடியும்.
அண்ணாமலை அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜெ. வி. சி, ஸ்ரீராம் அகியோருக்கு திமுகவால் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் அண்ணாமலையால தமிழகமே மாறப்போகிறது என்ற பிம்பத்தை வெறும் சமூக வலைத்தளங்களை வைத்து கட்டமைக்க முயற்சித்தனர். அதே நேரத்தில் சுயநலத்திற்காக, தன்னுடைய சொந்த அரசியல் வளர்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக உள்ள அண்ணாமலை தவறியும் அதிமுக பக்கம் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டனர். அண்ணாமலையின் அறிவுக் குறைபாட்டிற்கு ஆதாரம் அண்ணாமலை நம்பிய ரவீந்திரன் துரைசாமியும், ஸ்ரீராமும் தான்.
இங்கே ஒரு வரலாற்று நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். வின் டீவி அலுவலகம் எழும்பூரில் இருந்தபோது நடந்த ஒரு விவாதத்தின்போது அன்றைய பாரத பிரதமரையும், தேசிய தலைவர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியவன் தான் இந்த ரவீந்திரன் துரைசாமி. இன்று தன்னை இந்துத்துவ ஆதரவாளனாக காட்டிக் கொள்ளும் சாமர்த்தியம் பிரமாதம். ஆடு கசாப்புக் கடைக்காரனை நம்புவது போல அண்ணாமலை நம்பியதில் பெரிதாக ஆச்சரியம் ஒன்றுமில்லை
நான் முன்பே கூறியது தான். கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கூட்டணி உடைப்பு, ரகசிய வீடியோக்கள் என அனைத்தையும் திட்டமிட்டு செய்தது அண்ணாமலை தான். சீனியர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவமானப்படுத்தியது, மிரட்டியது என அண்ணாமலை செய்த பல செயல்களின் பின்னால் இருப்பது அண்ணாமலைக்கு உள்ள "Sociopath" என்ற மனோவியாதி.
அந்த வியாதியின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் வாய்கூசாமல் பொய் பேசுவது!!! 20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம். ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது என்பது கடினமான காரியம் என்பது பாஜகவின் அனைத்து தலைவர்களின் ஒட்டுமொத்த கருத்து. அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications