சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலில் விழுவதா?.. சைக்கிள் கேப்பில் அதிமுகவை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிவது போல் விமர்சித்த கமல்

Google Oneindia Tamil News

சென்னை: காலில் விழும் கலாச்சாரத்தை மெல்ல மெல்ல ஒழிக்க பாடுபட்டு வருகிறோம் என அதிமுகவினரை மெதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வம்புக்கு இழுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சனி, ஞாயிறுகளில் வரும் கமல்ஹாசன் சில நேரங்களில் அரசியல் பேசுவது வழக்கம்.

அந்த வகையில் அவர் குறிப்பாக அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்வதுண்டு. நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரிக்கும் பாலாஜிக்கும் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

கொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்!கொரோனா அச்சத்தையும் மீறி கடைகளில் திரண்ட மக்கள்.. திருச்சியில் களைக்கட்டும் தீபாவளி பர்சேஸ்!

கண்கலங்கிய ஆரி

கண்கலங்கிய ஆரி

ஆரி ஏதேனும் நல்லது கெட்டது குறித்து அறிவுறுத்தினாலும் அதை பாலாஜி காதில் போட்டு கொள்வதில்லை. எவிக்ஷன் லிஸ்ட்டில் இருந்த ஆரியை கமல்ஹாசன் சேஃப் என சொல்லிவிட்டு என்ன சந்தோஷமா என கேட்டார். அதற்கு ஆரியோ கண்கலங்கினார்.

மன்னிப்பு

மன்னிப்பு

நான் இந்த நிகழ்ச்சியை விட்டு போகணும் என இருந்தேன். சம்யுக்தாவை நான் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது. இதற்காக நான் அவரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறேன் என்றார். அதற்கு கமலோ, எதற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணும்?

மன்னிப்பு கேட்கணும்

மன்னிப்பு கேட்கணும்

காலில் விழும் கலாச்சாரத்தை ஒழிக்க நான் பாடுபட்டு வருகிறேன். எனவே கையை குலுக்கி மன்னிப்பு கேளுங்கள். இல்லாவிட்டால் கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சற்று தூரம் தள்ளி நின்றுக் கொண்டு மன்னிப்பு கேளுங்கள் என்றார்.

கிண்டல்

கிண்டல்

ஜெயலலிதா வெளியே சென்றால் போதும் அதிமுக நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் அவரது காரின் டயர்களை விழுந்து வணங்கும் சம்பவங்களை அனைவரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசனோ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கூறியது வைரலாகி வருகிறது.

English summary
Kamal Haasan in Biggboss indirectly criticises ADMK for their activities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X