சபாஷ் ஆண்டவரே.. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கு விசா, டிக்கெட் வழங்கி உதவி புரிந்த கமல்ஹாசன்
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான DPL கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியை சேர்ந்த 23 பேருக்கு விசா மற்றும் டிக்கெட் வழங்கி நடிகர் கமல்ஹாசன் உதவி புரிந்துள்ளார்.
இதற்கு தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணி
இது தொடர்பாக தமிழக மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா கூறியதாவது:- மாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக DPL கிரிக்கெட் தொடர் துபாயில் வருகிற ஏப்ரல் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு தமிழகத்திலிருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் என்ற அணியாக விளையாட இருக்கின்றனர்.

உதவி கிடைக்கவில்லை
இப்போட்டிக்கு செல்ல கடைசி நேரத்தில் எங்களுக்கு வர வேண்டிய உதவி வரவில்லை. இப்போட்டிக்கு எப்படி செல்வது? என்று அனைவரும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தோம். கோவைக்கு கிரிக்கெட் விளையாட வந்திருந்த நாங்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கோயம்புத்தூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க முயற்சி செய்தோம்.

கமல்ஹாசனை சந்தித்தோம்
உடனடியாக அனுமதி கிடைத்தது. எங்களைச் சந்திக்க ஊன்றுகோலின் உதவியுடன் சிரமப்பட்டே அவர் நடந்து வந்தார். இந்த வயதில் காலில் வலியுடன் ஊன்றுகோலை ஊன்றி நடப்பது எவ்வளவு சிரமம் என்பது மற்றவர்களை விட எங்களுக்கு மிக நன்றாக தெரியும். எங்களது இக்கட்டான சூழ்நிலையை அவருக்கு விளக்கினோம். கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

கமல்ஹாசன் உதவி புரிந்தார்
நாங்கள் எப்படி விளையாடுவோம் என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டார். நாங்கள் விளையாடும் வீடியோவை ஆர்வமுடன் வாங்கிப் பார்த்தார். தன்னால் ஆன உதவியை செய்வதாகக் கூறி வழியனுப்பி வைத்தார். அடுத்த நாளே எங்களுக்கு உதவி கிடைத்து விட்டது. துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா சென்னை சூப்பர் ஸ்டார் அணியில் மொத்தம் உள்ள 23 பேருக்கும் உடனடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

நன்றி கடன் பட்டிருக்கிறோம். இந்த உதவியை மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். அவருக்கு நாங்கள் செய்யும் கைமாறாக எங்களது வெற்றியை சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். பத்மஸ்ரீ கமல் ஹாசன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சச்சின் சிவா தெரிவித்தார்.
இந்த உதவியை மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காமல் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். அவருக்கு நாங்கள் செய்யும் கைமாறாக எங்களது வெற்றியை சமர்ப்பிப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம். பத்மஸ்ரீ கமல் ஹாசன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று சச்சின் சிவா தெரிவித்தார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications