"யாரென்று தெரிகிறதா.." வெல்டன் கமல்.. ஒத்த முடிவால்.. மொத்த விமர்சனங்களை தூள் தூளாக்கி.. அசத்தல்
சென்னை: தன் மீது வீசப்பட்ட இரு விமர்சனங்களை அப்படியே பிடித்து.. திருப்பி அடித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.
Recommended Video

சமீபத்தில் கொளத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தபோது குறிப்பிட்ட ஒரு வார்த்தை யாருக்கும் மறந்திருக்காது.. "பகுத்தறிவாளனாக வாழும் என் மீது காவி சாயம் பூசுகிறார்கள்.. நான் நேர்மையில் குளித்தால் சாயம் கலைந்துவிடும்.." என்று அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக பேசியிருந்தார் கமல்ஹாசன்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் தன் மீது பூசப்பட்ட காவியத்தை கழுவி விட்டார் என்று சொல்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

கமல்ஹாசன் முதல் முறையாக போட்டி
கமல்ஹாசன் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்துள்ள தொகுதி தான் இப்போது டாக் ஆஃ தி டவுன். கோவை தெற்கு தொகுதியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா. அங்கு அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் போட்டியிருந்தால் வானதி சீனிவாசன் வெற்றி எளிதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இப்போது கமல்ஹாசன் அங்கு களமிறங்குகிறார்.

விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி
கோவை லோக்சபா தொகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வாங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம். எனவே வானதி சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் இருவருக்குமே இது ஒரு கடுமையான போட்டியாக மாறக்கூடும். அந்த வகையில் பாஜக ஆதரவாளர் என்று எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். பாஜக போட்டியிடும் தொகுதியில்.. அதுவும் அந்த கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் போட்டியிடும் தொகுதியில்.. எதிர்த்து நிற்கிறார் கமல்ஹாசன். இப்போது அவர் கொளத்தூர் தொகுதியில் பேசிய பேச்சை ரீவைண்ட் செய்து பார்த்தால் அவரது பேச்சில் இருந்த உண்மை புலப்படும்.

மயிலாப்பூர் இல்லை
அதேபோல்தான் மற்றொரு விமர்சனம் சிலரால் அவர் மீது முன்வைக்கப்பட்டது. அது, மயிலாப்பூர் "போன்ற ஒரு தொகுதியை" அவர் தேர்ந்தெடுப்பார். ஜாதி ஓட்டுகளை குறி வைப்பார், என்றெல்லாம் சிலர் சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். ஆனால், அதற்கு பெரிய முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கமல்ஹாசன். கோவை போன்ற பெருவாரியாக வேறு ஒரு ஜாதி பிரிவினர் இருக்கக்கூடிய தொகுதியை தேர்ந்தெடுத்து, தான் சாதி மற்றும் மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் என்பதை காட்டும் வகையில் களமிறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

கமல் வித்தியாசமானவர்
கமல் மீது வீசப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் வலது கையால் பிடித்து இடது கையால் தூக்கி எறிந்துள்ளார் என்றுதான் இதை பார்க்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் தனது பாணி தனி பாணி என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் கமல்ஹாசன் என்கிறார்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications