லோக்சபா தேர்தல் முக்கியமல்ல.. சட்டசபைக்கு செல்வோம்.. இடைத்தேர்தலுக்காக கமல்ஹாசன் பலே திட்டம்!
தமிழகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று செய்திகள் வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று செய்திகள் வருகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அதே நாளில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.
மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. 3 இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் முடிவு
ஏற்கனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்து இருக்கிறது. லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போகிறோம். திமுக, அதிமுக கூட்டணியில் சேர மாட்டோம். நாங்கள் புதிய பாதையை ஏற்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்து இருக்கிறது. தலைவர் கமல்ஹாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

முக்கியம்
இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடிவு செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

தனித்து போட்டி
இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவது போலவே சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. 18 தொகுதிகளிலும் முக்கியமான வேட்பாளர்களை நிறுத்த மக்கள் நீதி மய்யம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகலாம்.

கமல்ஹாசன் திட்டம்
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறது என்று கமல்ஹாசன் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசன் இந்த முறை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள். ஆம் லோக்சபாவை விட சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதான் பிளான்
தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன். இதனால் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, இப்போதே ஒரு எம்எல்ஏ சீட் பெற்று சட்டசபை பாடத்தை கற்கும் எண்ணத்தில் அவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் கமல்ஹாசன் இதுகுறித்து பேச வாய்ப்புள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications