சினிமாவுக்கு மொழி தேவையில்லை என்ற கமல்.. 2012 சம்பவத்தை நியாபகப்படுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமாவுக்கு மொழி தேவையில்லை என்று பிரபல இணைய தொடர்பான ஸ்குவீடு கேம் (Squid Game) தொடரை குறிப்பிட்டு பேசினார். முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, கமலின் 2012 சம்பவத்தை நியாபகப்படுத்தி பேசினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறது. அதற்காக பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து தரமான படங்களை, வெப் சீரிஸ்களை உருவாக்க முடிவு செய்திருக்கிறது. இதன்படி நல்ல திரைக்கதை, நல்ல ஸ்டோரி வைத்துள்ளவர்களின் கதைவைத்து வெப் சீரியஸ், திரைப்படங்களை தயாரிக்க ஜியோஹாட்ஸ்டார் முடிவு செய்துள்ளது.அதேபோல் திரையரங்கில் ஓடிய திரைப்படங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இன்று நடந்தது.இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, நாகார்ஜூனா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் நான்கு தென் மாநிலங்களில் ரூ.12,000 கோடி முதலீட்டை அறிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பகுதியாக தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், ஸ்குவிட் கேம் விட் கேம் Squid Game என்ற இணைய தொடர் உலகம் முழுவதும் பலகோடி பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.. சினிமாவுக்கு மொழி தேவையில்லை.தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் ஒரு கலைஞனால் யாரையும் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது. பொழுதுபோக்கு துறையில் உலகின் முன்னணி அமைப்பாக தமிழ் என்டர்டெய்ன்மென்ட் துறை உயர வேண்டும் என்று கூறினார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "நான் எப்போதும் சொல்வதுதான். நல்ல கண்டன்ட் தான் இப்போது ராஜா. கன்டென்ட் நன்றாக இருந்தால் அது எப்போதும் மக்களால் கொண்டாடப்படும். கன்டென்ட் நன்றாக இருந்தால் மொழி, இனத்தை தாண்டி அதற்கான வரவேற்பு அனைத்து இடங்களிலும் கிடைக்கும். அதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளது.
எனவே இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களை கலைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம், அவசியம் அகும். எதை கற்றுக்கொள்ள வேண்டும், எப்படி கற்றுக்கொள்ள வேண்டும், அதை எப்படி கலையாக கொண்டுவர வேண்டும் என்பதற்கு கமல்ஹாசன் சார் ஒரு சிறந்த உதாரணம், நம் எல்லோருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். இப்போதும் கமல் சார் கற்றுக்கொள்கிறார்.
தற்போதும் திரைத்துரையில் வரும் புதிய அம்சங்களை பரிசோதித்து பார்ப்பதில், கற்றுக்கொள்வதில் முதல் ஆளாக இருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முறையாக ஒரு பெரிய திரைப்படத்தை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடும் முன்னோடி முயற்சியை கமல்ஹாசன் 2012 ஆம் ஆண்டே மேற்கொண்டார். ஓடிடி சினிமாவுக்கு மாற்றாகாது." என்று கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications