திறமையை மதிக்காத உலகத்துல நாம ஏன் வாழணும்னு நானும் நெனச்சேன்.. கமல்ஹாசன் ஓபன் டாக்!
சென்னை: என் திறமையை மதிக்காத உலகத்துல நான் ஏன் வாழணும்னு எனக்கும் கூட தற்கொலை எண்ணம் வந்திருக்கு... அப்படி ஒரு அசட்டுத்தனத்தை நான் செய்திருந்தா இன்று இங்கே நின்றிருக்க மாட்டேன் என கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்சுரி டாஸ்கில் கடந்து வந்த பாதை குறித்து ஒவ்வொரு போட்டியாளராக விவரித்து வருகிறார்கள். அதில் இசைவாணி , சின்னப்பொண்ணு கதையில் வறுமையும் கடும் உழைப்பும் தெரிந்தது.
அது போல் சுருதியின் கதையில் பாலிய விவாகம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது. பாவனி ரெட்டி கடந்து வந்த பாதையை கேட்கும் போது தற்கொலை எண்ணம் என்பது எத்தனை முட்டாள்தனமான ஒன்று என உணர்த்துகிறது.

கமல்ஹாசன்
இதில் பால்ய விவாகம் குறித்து கமல்ஹாசன் பேசுகையில் பால்ய விவாகத்தை கலெக்டரோ, எஸ்பியோதான் தடுக்க வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் தடுத்து நிறுத்தலாம். நோ சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும் என சுருதி தெரிவித்தார். அவர் நோ சொல்லிவிட்டார். ஆனால் அவரது தாய்க்கும் அவரது தாத்தாவுக்கும் நோ சொல்ல தெரியவில்லை என்றார்.

கமல்ஹாசன் பேச்சு
அடுத்தது பாவனி ரெட்டியின் கதை குறித்து கமல்ஹாசன் பேசினார். அப்போது அவர் கூறுகையில் பாதியில் விட்டுவிட்டுப் போனவர்கள் இருப்பவர்களுக்கு துக்கத்தைக் கொடுத்துட்டு போற விஷயம். ஜெர்மனி கான்சென்ட்ரேஷன் கேம்பஸில் வாழ்ந்தவங்களுக்கு மனித தோலால் ஆன சட்டைகள், மனித எலும்பினால் ஆன பட்டன் இருக்கும் ஆடைகள் கொடுக்கப்பட்டும் அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

சான்ஸ்
வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இது மட்டும்தான் ஒரே சான்ஸ். என் திறமையை மதிக்காத உலகத்துல நான் ஏன் வாழணும்னு எனக்கும் கூட தற்கொலை எண்ணம் வந்திருக்கும். அப்படி ஒரு அசட்டுத்தனத்தை நான் செய்திருந்தா எவ்வளவு பெரிய மேடைகளையும் புகழையும் இழந்திருப்பேன் என்று பொட்டில் அடித்து யோசிக்க வைத்தது என்றார் கமல்ஹாசன்.

முடிவுகள்
அது போல் இந்த நிகழ்ச்சியில் நீட் தேர்வினால் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொள்வது குறித்தும் பேசிய கமல், அது போன்ற முடிவுகளில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது. வாழ்க்கையை விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications