பெற்றோர் போட்டோ.. தலைமீது கை வைத்து அண்ணி ஆசி.. சொன்ன "அட்வைஸ்!" அப்படியே நெகிழ்ந்து போன கமல்ஹாசன்
சென்னை: தாய் தந்தையர் புகைப் படத்துக்கு முன்பாக வேட்புமனுவை வைத்து ஆசீர்வாதம் பெற்றதோடு, தாய்க்கு நிகராக, தான் மதிக்கும், அண்ணியிடமும் ஆசி வாங்கிவிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன்.
இந்த சட்டசபை தேர்தலில், முதன்முறையாக போட்டியிடுகிறார் கமல்ஹாசன். கோவை தெற்கு தொகுதியில் அவர் களமிறங்குகிறார்.
இதையொட்டி அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

குழந்தையாக மாறிய கமல்
என்ன தான் அரசியலில்.. பிற கட்சிகளை அடித்து துவைத்து காயப்போட்டு ஆவேசமாக உரையாற்றினாலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தான் இன்னமும் ஒரு குழந்தைதான் என்பதைப் போல கமல்ஹாசனின் செயல்பாடுகள் இருந்தன. ஆம்.. அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, தனது வீட்டிலும் அங்கே உள்ள அலுவலகத்திலும் என்னவெல்லாம் நடந்தது என்பதை ட்விட்டர் பதிவு வாயிலாக வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

வேர்களின் ஆழம்
பொருத்தமான ஒரு கேப்ஷன் அதற்கு கொடுத்துள்ளார். கிளைகளின் உயரம் ஊர் அறியும். வேர்களின் ஆழம் யார் அறிவார்?! குடும்பத்தைக் கொண்டாடுங்கள். உலகம் உங்களைக் கொண்டாடும். இவ்வாறு அவர் அதில் கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த எழுத்துக்களுக்கு தக்கபடி தான் அவரது செயல்பாடும் இருந்தது.

யார், யார்
கமல்ஹாசனின் இளையமகள் அக்ஷரா, தனது அண்ணன் சாருஹாசனின் மனைவி, சாருஹாசன் மகள் சுஹாசினி மற்றும் பல உறவினர்கள் அப்போது வந்திருந்தனர். முதலில் தாய், தந்தை படத்திற்கு முன்பாக வேட்புமனுவை வைத்து மரியாதை செய்தார், கமல்ஹாசன்.

அண்ணியிடம் ஆசி
இதையடுத்து தனது அண்ணியிடம் ஆசி பெற்றார். அவர் புகைப்படத்திலுள்ள தனது மாமனார்-மாமியார் போட்டோவை கும்பிட்டுவிட்டு, அப்படியே, கையை கமல்ஹாசன் தலைமீது வைத்து ஆசி கூறினார். அதை பவ்யமாக மரியாதையோடு ஏற்றுக் கொண்டார் கமல்ஹாசன்.
அப்போது கமலஹாசன் அண்ணி சில அட்வைஸ் கொடுத்தார். "போகும் வழி சிரமம்தான். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையல்ல. ஆனா, உன் அப்பா வழியில் போகிறாய். கண்டிப்பாக உனக்கு வெற்றிகிடைக்கும்" என்று ஆசீர்வதித்தார் அண்ணியார்.

நெகிழ்ந்த கமல்ஹாசன்
கமல்ஹாசனின் மூத்த அண்ணன் சந்திராஹசனும் அவரது மனைவியும் மறைந்துவிட்டனர். இப்போது தாய்-தந்தை ஸ்தானத்தில் இருப்பது சாருஹாசனும் அவர் மனைவியும்தான். இந்த நிலையில்தான், தாய் தந்தை புகைப்படத்தின் முன்பாகவும், அண்ணியிடமும் ஆசி பெற்று, நெகிழ்ச்சியோடு, வேட்புமனு தாக்கல் செய்ய கிளம்பினார் கமல்ஹாசன்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications