திமுக என்பது உணர்வு.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கையும் அதுதான்.. கமல்ஹாசன் பேச்சு!
சென்னை: மகளிர் உரிமைத் தொகை என்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிந்தனையை திமுக செயல்படுத்தியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான் என்று கூறிய கமல்ஹாசன், திமுக என்பது ஒரு உணர்வு என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திமுகவினர், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவிலும் கலந்து கொண்டார்.

அப்போது கமல்ஹாசன் பேசுகையில், திடீரென அரசியலுக்கு இக்கட்டுக்காகவோ, சூழலுக்காகவோ நான் திமுகவுடன் சேரவில்லை. எங்கள் கொள்கைகள் ஒரே மாதிரியானது. நாங்கள் சொன்ன சிந்தனையான மகளிர் உரிமைத் தொகை கையில் எடுத்துக் கொண்டு திமுக செயல்படுத்தியது. இவர்களோடு சேர்வதா? அல்லது நாம் யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்வதா?
பெரிய சிந்தனை, அரசியல் அறிவு அவர்களுக்கு இருப்பதாக நினைத்து கொண்டும், நமக்கு இல்லாதது போலவும் கவலை கொள்ள கூடாது. வடநாட்டில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தால் யார் நிர்வாகிகள் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக ஓடியவர்கள் அயர்ந்து அமர்ந்த இடம் தான் இந்த பகுதி.. 13 ஆண்டுகள் ஓடினார்கள் என்று சொல்வார்கள்.
13 ஆண்டுகள் ஓடினாலும், அதில் எங்களுக்கு வெற்றியே இல்லை என்று சொல்ல முடியாது. 5 முறை முதல்வராகி இருக்கிறார் கருணாநிதி.. 13 ஆண்டுகள் ஓய்வு கொடுத்தது சரிதான்.. அந்த ஓய்வு கூட எங்களுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் ஓய்வு கொடுக்கவில்லை என்றால், அவ்வளவு நீண்ட காலம் கருணாநிதி வாழ்ந்திருக்க மாட்டார். அந்த ஓய்வுக்கு நன்றி..
அதேபோல் கருணாநிதியின் பேரனும் வெகு நாள் வாழ்ந்து திமுக என்ற அமைப்புக்கு நன்மை செய்ய வேண்டும். திமுக என்பது ஒரு உணர்வு.. சரியான ஆட்கள், சரியான நேரத்தில் வந்தார்கள்.. என்னுடைய வயது என்னவோ, அதுதான் திமுக பற்றிய என்னுடைய புரிதல்.. நான் திறந்த போது பார்த்த சூரியன் இதுதான்.. இருட்டை பார்த்து பயப்பட கூடாது.. ஏனென்றால் விடியல் வரும்.. உதயநிதியும் வருவார் என்று தெரிவித்துள்ளார்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications