கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்?.. கமல்ஹாசன்
சென்னை: கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
12,838 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் நேரடி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 22 ஆம் தேதி வெளியாகிறது. மொத்தம் 1,298 பதவியிடங்களுக்கு மார்ச் 4-ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் போட்டி
இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது. மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகில் உள்ள விசாலாட்சி தோட்டம் குடிசைப் பகுதியில் (123 ஆவது வார்டு) இன்று அவர் பிரச்சாரம் செய்தார். காலை 11.30 மணிக்கு தனது காரில் வந்து இறங்கிய கமல், குடிசை பகுதிகளுக்குள் நடந்தே சென்றார். கமலை பார்த்த பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.

மக்கள் நீதி மய்யம்
கமலும் அவர்களுடன் பேசி குறைகளை கேட்டறிந்தார். மேலும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு போடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களிடம் அவர் பேசுகையில் 8 மாதங்களாக தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ஆளுநர்
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் மத்திய அரசு சொல்வதைத்தான் ஆளுநர் கேட்பார். நாம் தலைவர்களை தேடக் கூடாது. சமூக சேவகர்களை தேட வேண்டும். விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நம்மால் மலம் அள்ளும் என் தம்பிகளுக்கு ஒரு இயந்திரம் கண்டுபிடிக்க முடியாதா? ஆளுநர், மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்படுகிறர்; ஆளுநர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது.

வடக்கு இந்திய கம்பெனி
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? தலைமைக்கும், பதவிக்கும் கட்சிக்கு வரவில்லை, தமிழ்நாட்டுக்காக வந்துள்ளேன், ஆட்சியை பிடிக்க எல்லோருக்கும் ஆசைதான். முதலில் குடுமியை பிடிக்க வேண்டும். பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications