நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் குறைந்த வாக்குகள்.. மாற்றங்கள் கடுமையாக இருக்கும்.. கமல் வார்னிங்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடக்கவுள்ள மாற்றங்கள் கடுமையாக இருக்கும் என நிர்வாகிகளை கமல் எச்சரித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைத் தேர்தலில் சரத்குமார் மற்றும் ஐஜேகே கட்சியுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிட்டது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் 133 தொகுதிகளில் போட்டியிட்டது மக்கள் நீதி மய்யம். இதில் ஒரு தொகுதியில் கூட இக்கட்சி வெல்லவில்லை. தமிழகத்தில் 5ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

வாக்கு சதவீதம்
இந்த தேர்தலில் இக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 2.45 ஆகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதாவது கட்சித் தொடங்கிய ஓராண்டில் போட்டியிட்ட அக்கட்சி 5 தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேலான வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் 3.71 சதவீதம் வாக்குகளை பெற்றது.

குறைந்த வாக்கு சதவீதம்
கடந்த சட்டசபைத் தேர்தலில் கடந்த முறையைக் காட்டிலும் அதிகமான இடங்கள் கிடைக்கும் என்றும் அக்கட்சியை சேர்ந்த ஓரிருவர் சட்டசபைக்கு செல்வர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலை காட்டிலும் 1.26 சதவீதம் குறைந்த வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ளது.

பணியாற்றவில்லை
இதற்கு காரணம் அனைத்து நிர்வாகிகளும் கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் அதிக கவனம் செலுத்தியது காரணமாக இந்த தோல்வி என சொல்லப்படுகிறது. மேலும் பலர் கட்சி பணியாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.

கமல் எச்சரிக்கை
சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு பிறகு முக்கிய நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில் உடனடியாக கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்கள் வரும். அது கடுமையாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications