சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1985-லேயே கமல்ஹாசனை அரசியலுக்கு அழைத்தாரா எம்ஜிஆர்?.. தீயாய் பரவும் தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: 1985-ஆம் ஆண்டு கமல்ஹாசனை அரசியலுக்கு வருமாறு எம்ஜிஆர் அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலில் தங்களை ஜெயலலிதா, கருணாநிதிக்கு இணையாக முன்னிலைப்படுத்த அதிமுகவினரும், திமுகவினரும் முயற்சிக்கிறார்கள்.

அது போல் அந்த இரு ஜாம்பவான்களின் கட்சிகளை போல் தங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என பிற கட்சியினர் நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியவர் பெரியார்.. கமல்ஹாசன்தமிழகத்தில் அடிப்படைவாதம் நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக மாற்றியவர் பெரியார்.. கமல்ஹாசன்

நல்லாட்சி

நல்லாட்சி

ஆனால் எம்ஜிஆரின் பெயர், அவரது நல்லாட்சியை கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் பேசி வருகிறார்கள். ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசிய போது, யாராலும் எம்ஜிஆர் ஆக முடியாது. இனி அவரே பிறந்தால்தான் உண்டு. ஆனால் எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை என்னால் தர முடியும் என்றார்.

எம்ஜிஆர் பெயர்

எம்ஜிஆர் பெயர்

அது போல்தான் கமல்ஹாசனும் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தினார். தான் எம்ஜிஆரின் நீட்சி என்றார். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கமல்ஹாசனோ எதற்கும் சளைக்காமல் எம்ஜிஆர் திமுகவில் இருந்த போது திமுக திலகமும் இல்லை, அதிமுகவில் இருந்த போது அதிமுக திலகமும் இல்லை.

சொந்தம்

சொந்தம்

அவர் எப்போதும் மக்கள் திலகம். எனவே அவரை சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை என்றார். மேலும் எம்ஜிஆரை பார்த்திராதவர்களே நான் அவர் மடியிலேயே விளையாடி இருக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனை எம்ஜிஆரே அரசியலுக்கு வருமாறு அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் நேரடியாக அறிவிக்கவில்லை

கமல் நேரடியாக அறிவிக்கவில்லை

1985 ஆம் ஆண்டு காக்கிச் சட்டை படம் வெளியானது. அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் அந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். அப்போது கமலை அரசியலுக்கு வருமாறு எம்ஜிஆர் அழைத்தாராம். இதுகுறித்து கமல் நேரடியாக அறிவிக்கவில்லை.

தாடி வெள்ளை

தாடி வெள்ளை

ஆனால் அண்மையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் எனது தாடி வெள்ளையாக இருக்கும் போதே நான் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் தாமதமாகிவிட்டது. அதற்காக உங்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். லேட்டாக வந்தாலும் தாடி கருப்பாக இருக்கும் போது என்னென்ன வளர்ச்சி திட்டங்களை செய்ய முடியுமோ அதை இப்போது செய்துவிடலாம் என தெரிவித்திருந்தார். ஒரு வேளை எம்ஜிஆர் அழைப்பை வைத்து அவர் அப்படி கூறினாரா? என தெரியவில்லை.

English summary
Kamal Haasan was invited to politics in the year 1985? It was shared by closure of Kamal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X