எமெர்ஜென்சி காலத்தில்தான் இப்படி நடந்தது! Thug Lifeக்கு போட்டது தடையல்ல, கருத்துரிமை மீதான சாட்டையடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது போல நீங்களும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் என கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி அன்பின் மிகுதியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதற்காக தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இதை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தக் லைப் ஜூன் 5ம் தேதி உலகமெங்கும் ரிலீசாக உள்ள நிலையில் கர்நாடகாவிலுள்ள தமிழர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அன்பால் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் விளக்கிய பிறகும், தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக உள்ள கர்நாடக அரசியல்வாதிகள் மற்றும் கன்னட அமைப்பினரின் அழுத்தத்தால் பிலிம் சேம்பர் இப்படி ஒரு முடிவை எடுத்து கலைத்துறையின் மீது தீரா களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

thug Life karnataka kannada

படங்களின் கதை சர்ச்சைக்குரியதாக உள்ளது என்பதால் தடை செய்யப்பட்ட வரலாறு பல உண்டு. ஆனால், படத்திற்கு தொடர்பில்லாமல் பொது கருத்தை பேசியதற்காக ஒரு நடிகரின் படத்தை தடை செய்தது சமீபத்தில் இதுதான் முதல்முறை. அதுவும், மொழி அறிஞர்கள் தீர்மானிக்கட்டும், நான் கருத்தை மட்டுமே சொன்னேன் என்று கலைத்தாயின் செல்ல மகன் கமல்ஹாசன் கூறிய பிறகும் இந்த தடை விழுந்தது பெரும் கொடூரம்.

இதுபோன்ற அடக்குமுறை எமர்ஜென்சி காலத்திலும், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில்தான் முன்பெல்லாம் இருந்தன. அந்த கருப்பு பக்கங்களை மீண்டும் எழுதியுள்ளது கர்நாடக தரப்பு.

தேவ் ஆனந்த் - அவசர காலத்தின் போது (1975)

தேவ் ஆனந்த்தின் நிலைமை இதற்கு மிகச் சிறந்த உதாரணம். 1975-ல் அவசர காலத்தின் போது இந்திரா காந்தி அரசு தேவ் ஆனந்த்திடம் அவசர காலத்தை பகிரங்கமாக ஆதரிக்குமாறு கேட்டார். அவர் அதை மறுத்ததால், தூர்தர்ஷனில் அவரது அனைத்து படங்களும் தடை செய்யப்பட்டன. மேலும் அரசு ஊடகங்களில் அவரது பெயரைக் கூட குறிப்பிடுவது தடை செய்யப்பட்டது.

thug Life karnataka kannada

கிஷோர் குமார்

அதே காலகட்டத்தில் பாடகர் கிஷோர் குமாரின் பாடல்களும் அரசு தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. அவரும் அவசர காலத்தை ஆதரிக்க மறுத்ததே இதற்கு காரணம்.

மஜ்ரூஹ் சுல்தான்புரி - நேரு காலத்தில் (1951)

பிரபல பாடலாசிரியர் மஜ்ரூஹ் சுல்தான்புரி 1951-ல் மும்பையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தில் நேருவுக்கு எதிராக கவிதை படித்ததற்காக கைது செய்யப்பட்டார். மன்னிப்பு கேட்க மறுத்ததால் ஆர்தர் ரோடு சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டார்.

பல்ராஜ் சாஹ்னி

நடிகர் பல்ராஜ் சாஹ்னி 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊர்வலத்தில் பங்கேற்றதற்காக வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டி ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹ்ருதயநாத் மங்கேஷ்கர்

லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹ்ருதயநாத் மங்கேஷ்கர் சாவர்க்கர் பற்றி புகழ்ந்து எழுதிய கவிதையை ஆகாஷ்வாணியில் பாட விரும்பினார். ஆனால் அதற்காக அவர் ஆகாஷ்வாணியில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார்.

தற்போதைய கமல்ஹாசன் நிலைமை

இப்போது கமல்ஹாசன் "தமிழிலிருந்து கன்னடம் பிறந்தது" என்று கூறியதற்காக கர்நாடகாவில் "தக் லைப்" படம் தடை செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் கதையுடன் எந்த தொடர்பும் இல்லாத, நடிகரின் தனிப்பட்ட கருத்துக்காக விதிக்கப்பட்ட தடை.

இந்தியாவில் நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் தங்கள் படங்களுடன் தொடர்பில்லாத அரசியல், சமூக அல்லது மொழி சார்ந்த கருத்துகள் தெரிவித்ததற்காக அவர்களின் படங்கள் தடை செய்யப்பட்ட வரலாறு நீண்டது. இப்போதைய டிஜிட்டல் உலகிலும் எமெர்ஜென்சி காலத்து நடைமுறை தொடர்வது கலைத்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகத்தான் தெரிகிறது. இது கலை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மீதான சாட்டை வீச்சு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+