சமூகநீதித்தலைவர்! மொழி வளர்த்த தமிழாளர்! பிறந்தநாளில் மாஜி முதல்வர் கருணாநிதியை நினைவுகூர்ந்த கமல்
சென்னை: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி பிறந்தநாளையொட்டி, ‛‛ எளிமையில் இருந்து உயர்வுக்கு செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூக நீதித்தலைவர், மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்'' என மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி. திமுகவின் நீண்டகால தலைவராக இருந்த இவர் 5 முறை முதல்வராக பதவி வகித்துள்ளார். 2018 ஆகஸ்ட் 7 ம் தேதி வயது மூப்பின் காரணமாக மறைந்தார். தமிழகத்தின் வளர்ச்சியில் இவரது பங்கு முக்கியமானது.

இந்நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கும் நிலையில் கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் முதல் முறையாக அரசு சார்பில் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் திமுகவின் உற்சாகமடைந்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்க மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கருணாநிதியின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛எளிமையில் இருந்து உயர்வுக்கு செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்'' என கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!












Click it and Unblock the Notifications