பிறந்தநாளில் கருப்பு உடையில் வந்த கமல்... பூரண கும்ப மரியாதை கொடுத்த ரசிகர்கள்

பிறந்தநாள் தினமான இன்று கருப்புச்சட்டையில் வந்து ரசிகர்களை சந்தித்தார் கமல்ஹாசன். பூரண கும்ப மரியாதை கொடுத்து பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தனர் ரசிகர்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல நாட்கள், விஷேச தினங்களில் கருப்பு உடைகள் அணியக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். முக்கியமாக பிறந்தநாளில் அணியும் உடை மங்களகரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நடிகர் கமல்ஹாசன் இந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் பிறந்தநாளான இன்றைய தினம் கருப்பு உடையில் வந்து ரசிகர்களை சந்தித்தார். அதே நேரத்தில் கமலுக்கு கண் பட்டு விடக்கூடாது என்று பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தனர் அவரது ரசிகர்கள். கமல்ஹாசனை வரவேற்கும் வகையில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் இன்றைய தினம் தனது 66வது பிறந்தநாளினை கொண்டாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்ற கமல்ஹாசனுடன் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

Kamal hassan wear black dress on his birthday

நடிகர் கமல்ஹாசனை காண கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தன்னை காண காத்திருந்த தொண்டர்களுக்காக காரின் மேல் பகுதியில் நின்று கையசைத்தார். கமல்.

Kamal hassan wear black dress on his birthday

அப்போது மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் தொண்டர்கள். அதனை தொடர்ந்து நடிகர் கமலுக்கு பூசணிக்காய் சுற்றியும் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு பின்னர் படப்பிடிப்புக்கு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+