'நான் உயிரோடு இருக்க காரணமே கமல் சார் தான்'.. வேகமாக பரவும் மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜியின் வீடியோ
சென்னை: என்னோட உடம்புல நாலு ப்ளாக் இருக்கு கோவிட் டைம்ல என்னால மருந்து வாங்க முடியல, கமல் சார்ட கேட்டேன் இன்னைக்கு வரைக்கும் மாசம் ஆனா ராஜ்கமல் ஆபிசில் இருந்து மருந்து வந்துட்டே இருக்கு நான் விடும் மூச்சு, நான் உயிரோடு இருக்க காரணமே கமல் சார் தான் என்று மறைந்த நடிகர் எஸ்.எஸ்.சிவாஜியின் உருக்கமான பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அபூர்வ சகோதரர்கள்' தொடங்கி 'கோலமாவு கோகிலா', 'கார்கி' என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவர் இயக்குநர், நடிகர் சந்தான பாரதியின் சகோதரர் ஆவார். மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

எஸ்எஸ் சிவாஜி பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். கனகராஜ் குறித்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் 'நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்..' என்று கூறுவார். அதுவே எஸ்எஸ் சிவாஜியின் டிரேட் மார்க் அடையாளமாக மாறியது.
நடிகர் எஸ்.எஸ். சிவாஜி மறைவை தொடர்ந்து அவரை பற்றி நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சித்ரா லட்சுமணனின் யூடியூப் சேனலுக்கு எஸ்.எஸ்.சிவாஜி பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி இப்போது பலராலும் பகிரப்படுகிறது.
அதில் எஸ்.எஸ்.சிவாஜி கூறுகையில்,கூறுகையில், "எனக்கு இதயத்தில் 400 சதவீதம் அடைப்பு இருந்தது. எப்படியாவது இவரை(எஸ்எஸ் சிவாஜி) காப்பாற்றுங்கள் . அதற்கு என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை என்று கமல் டாக்டரிடம் சொன்னார். அதனால் தான் மீண்டு வந்தேன்.
என்னை பலரும் நடிக்க வைக்க பயந்தார்கள். காரணம் திடீரென கமல்சார் கூப்பிட்டால் போய்விடுவார் என்று என்னை பற்றி நினைத்தார்கள். நான் கண்டிப்பாக கமல் சார் கூப்பிட்டால் போவேன். அது என்னுடைய கடமை. நான் இன்று உயிருடன் இருந்து பேசுகிறேன் என்று சொன்னால் அது கமல் சாரால் தான். அந்த நன்றியை மறக்க முடியாதுல்ல
அதுபோல் தான் கோவிட் டைமில், மாறா, தாராளபிரபு உள்ளிட்ட படங்களை முடிச்சிட்டு வந்து நடுவில் பிரீஸ் ஆகிவிட்டது எனக்கு.. நிதி நிலை பாதிக்கப்பட்டது. ஒரு பக்கம் வாடகை கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் மருத்துவ செலவு பார்க்க வேண்டும். கமல் சார்கிட்ட கேட்லாமன்னு திடீர்னு யோசிச்சேன். என்னால மருந்து வாங்க முடியாதை நிலையை சொல்லி, கமல் சார்ட கேட்டேன்.
உடனே ராஜ்கமல் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. சார் பேசுனாரு.. உங்க பிரிஸ்கிரிப்சன் கேட்டாரு.. அடுத்த நாளே மெடிசன் வந்தது. இன்னைக்கு வரைக்கும் மாசம் ஆனா ராஜ்கமல் ஆபிசில் இருந்து மருந்து வந்துட்டே இருக்கிறது. நான் விடும் மூச்சு, நான் உயிரோட இருக்க காரணமே கமல் சார் தான்" என்று கூறியிருந்தார்.இதை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் சினிமாவை நேசிக்கும் பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.
என்னோட உடம்புல நாலு ப்ளாக் இருக்கு கோவிட் டைம்ல என்னால மருந்து வாங்க முடியல, #கமல் சார்ட கேட்டேன் இன்னைக்கு வரைக்கும் மாசம் ஆனா ராஜ்கமல் ஆபிசில் இருந்து மருந்து வந்துட்டே இருக்கு நான் விடும் மூச்சு, நான் உயிரோட இருக்க காரணமே கமல் சார் தான் - @rsshivaji❤️ pic.twitter.com/GpfFYkPxcr
— SundaR KamaL (@Kamaladdict7) September 2, 2023
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications